காதலியை இம்ப்ரஸ் செய்த நபரை சிறையில் தள்ளிய காவல்துறையினர் - என்ன செய்தார் தெரியுமா?

காதலியை இம்ப்ரஸ் செய்த நபரை சிறையில் தள்ளிய காவல்துறையினர் - என்ன செய்தார் தெரியுமா?

மாதிரிப் படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஐக்கிய அரபு அமீரகத்தில் காதலிக்கு பிறந்தநாள் பரிசாக, ஒட்டக குட்டியை திருடி வந்து பரிசளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேரந்த பெண் ஒருவர் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அவர், தன் காதலரிடம் விலையுயர்ந்த ஒட்டக்கத்தை பிறந்தநாள் பரிசாக கேட்டுள்ளார். காதலியின் ஆசையை நிறைவேற்ற புறப்பட்ட காதலரிடம், விலை உயர்ந்த ஒட்டகத்தை வாங்கும் அளவுக்கு பணம் இல்லை. இருப்பினும், காதலியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அந்த நபர், அங்கிருக்கும் ஒட்டக பண்ணையில் இருக்கும் ஒட்டகத்தை திருட திட்டம் தீட்டியுள்ளார்.

  அதன்படி, பண்ணையில் இருந்த விலை உயர்ந்த ஒட்டக குட்டியை திருடிச் சென்று காதலிக்கும் பிறந்தநாள் பரிசாகவும் கொடுத்துள்ளார். இதனிடையே, ஒட்டக பண்ணையின் உரிமையாளர், தன் பண்ணையில் இருந்த ஒட்டக குட்டி ஒன்றை காணவில்லை என ஐக்கிய அரபு அமீரக காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர்களும் தங்களால் இயன்றளவு விசாரணை செய்ததில் காணாமல்போன ஒட்டக குட்டியை கண்டுபிடிக்க முடியவில்லை. திருடிய ஒட்டக குட்டியை தொடர்ந்து வளர்த்தால் மாட்டிக்கொள்வோம் என அச்சத்தில் இருந்த அந்த நபருக்கு, காவல்துறையினர் விசாரணை செய்துவருவதை அறிந்தவுடன் மேலும் பயம் கூடிக்கொண்டது.

  Also read... காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் பொது நிகழ்வில் பங்கேற்ற கிம் ஜாங்-உன்னின் மனைவி ரி சோல்-ஜூ!

  ஒட்டக குட்டியை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடலாம் என முடிவெடுத்த அந்த நபர், இது தொடர்பாக காவல்துறையை தொலைபேசி மூலம் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த காவல்துறையினர் ஒட்டக குட்டி எப்படி அவரிடம் வந்தது என விசாரித்துள்ளனர். அப்போது, தனது பண்ணைக்கு அருகில் இந்த ஒட்டக் குட்டி சுற்றித்திரிந்ததாக கூறியுள்ளார். 

  ஆனால், மிகச்சிறிய ஒட்டகக்குட்டி சுமார் 2 மைல் தூரம் நடந்து வர வாய்ப்பில்லை எனக் கருதிய காவல்துறையினர், தங்களின் சந்தேகப் பார்வையை அந்த நபர் மேல் திருப்பினர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்த அந்த நபர், முடிவில் காதலிக்கு பிறந்தநாள் பரிசு அளிப்பதற்காக ஒட்டகத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ஒட்டக குட்டியை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், அந்த நபர் மற்றும் காதலி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: