Home /News /trend /

ஸ்கூட்டருடன் அந்தரத்தில் தொங்கிய உரிமையாளர்... அதிரடி காட்டிய போலீஸ்! வைரலாகும் வீடியோ..

ஸ்கூட்டருடன் அந்தரத்தில் தொங்கிய உரிமையாளர்... அதிரடி காட்டிய போலீஸ்! வைரலாகும் வீடியோ..

ஸ்கூட்டருடன் அந்தரத்தில் தொங்கிய உரிமையாளர்

ஸ்கூட்டருடன் அந்தரத்தில் தொங்கிய உரிமையாளர்

Maharashtra Viral Video | சற்று எதிர்பார்க்காத வகையில் போக்குவரத்து வாகனத்தில் இருந்த கிரேன் மூலமாக உரிமையாளருடன் சேர்த்து ஸ்கூட்டரை அலேக்காக தூக்கிய போக்குவரத்து காவல்துறை..வைரலாகும் வீடியோ..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Maharashtra, India
    மகாராஷ்டிராவில் ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போது ஸ்கூட்டர் மீது அமர்ந்திருந்த உரிமையாளரையும் சேர்த்து போக்குவரத்து காவல்துறையினர் அந்தரத்தில் தூக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    இந்தியா போன்ற போக்குவரத்து நெரிசல் மிக்க நாடுகளில் முக்கியமாக மீறப்படும் விதிகளில் ஒன்று பார்க்கிங். கடைவிதி, மார்க்கெட், ரயில் நிலையம், பஸ் ஸ்டேண்ட் என எங்கு இருசக்கரவாகனத்தில் சென்றாலும், ‘நோ பார்க்கிங்’ போர்டு எங்கு இருக்கிறதோ அதற்கு பக்கத்திலேயே பார்க்கிங் செய்பவர்கள் தான் அதிகம். இன்னும் சிலரோ தனது பைக் அல்லது ஸ்கூட்டருக்கு பாதுகாப்பாக பக்கத்திலேயே நின்று கொண்டு இருப்பார்கள். போலீசார் நோ பார்க்கிங் ஏரியாவில் நின்றிருக்கும் பைக்கை பறிமுதல் செய்ய வந்தால், உடனே வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு கிளம்ப முயற்சிப்பது போல் நடிப்பார்கள்.

    இதைப் பார்த்ததும் போக்குவரத்து போலீசாரும் “இங்க ஏன் வண்டிய நிறுத்துறீங்க? கிளம்புங்க” என எச்சரித்து அனுப்பிவிடுவார்கள்.இதில் சில காவலர்கள் மட்டுமே கறாராக அபராதம் வசூலிப்பது அல்லது வாகனத்தை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவார்கள். அப்படி ஸ்ட்ரிக்ட்டாக மகாராஷ்டிரா காவல்துறை முறையாக பார்க்கிங் செய்யப்படாமல் இருந்த ஸ்கூட்டரை அதில் உட்கார்ந்திருந்த உரிமையாளரோடு சேர்த்து அலேக்காக தூக்கிய வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Read More : ஒரே நிமிடத்தில் 17 அதிக காரமிக்க மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த நபர்..!


    கடந்த மாதம் 19ம் தேதி நாக்பூர் சதர் பஜாரில் உள்ள அஞ்சுமன் காம்ப்ளக்ஸ் அருகே நோ பார்க்கிங் ஏரியாவில் நபர் ஒருவர் தனது ஸ்கூட்டரை பார்க் செய்துள்ளார். இதனால் அவரது வாகனத்தை போக்குவரத்து காவல்துறையினர் இழுவை வண்டி மூலமாக பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஸ்கூட்டர் ஏறி அமர்ந்து கொண்டு ‘என்ன மீறி தூக்கிடுங்க பார்ப்போம்’ என அடம்பிடித்துள்ளார்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Hum Nagpurkar (@humnagpurkar)





    அப்போது அந்த நபரும், சுற்றியிருந்த பொதுமக்களும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் போக்குவரத்து வாகனத்தில் இருந்த கிரேன் மூலமாக உரிமையாளருடன் சேர்த்து ஸ்கூட்டரை அலேக்காக தூக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மறைந்திருக்கும் மற்றொரு ஸ்பெஷல் விஷயம் என்னவென்றால் ஸ்கூட்டரில் உட்கார்ந்திருக்கும் நபரை கிரேன் மூலம் தூக்கும் போது அவர் கொஞ்சம் கூட பதற்றத்தை வெளியே காட்டவே இல்லை.

    ஹம் நாக்பூர்கர் என்ற பிரபல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவை இதுவரை 83 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். ஏராளமானோர் ஷேர் செய்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர். இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் ஸ்கூட்டர் மீது அவ்வளவு பாசம் இருந்தால் முறையாக பார்க்கிங் கட்டணம் செலுத்தி பார்க் செய்திருக்கலாமே?, ஏன் இப்படி நோ பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு போலீசாருடன் விவாதம் செய்ய வேண்டும்? என அறிவுரை கூறியுள்ளனர்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Maharashtra, Trending, Viral Video

    அடுத்த செய்தி