Home /News /trend /

எங்க தலைக்கு தில்ல பாத்தியா... ஊழியரின் லீவுக்கான காரணத்திற்கு குவியும் பாராட்டு

எங்க தலைக்கு தில்ல பாத்தியா... ஊழியரின் லீவுக்கான காரணத்திற்கு குவியும் பாராட்டு

மாதிரி படம்

மாதிரி படம்

உண்மையை சொல்லி விடுப்பு எடுத்த நிகழ்வு குறித்த செய்தி தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

    நீங்கள் ஏதேனும் அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தால் இந்த அனுபவம் உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும். விடுமுறைக்காக நீங்கள் விண்ணப்பம் செய்யும்போது சில சமயங்களில் பொய் சொல்ல வேண்டியிருக்கும். ஏனென்றால் உண்மை சொல்லி விடுப்பு கேட்கும் ஊழியர்களை மேலாளர்கள் அல்லது டீம் லீடர்கள் அவ்வளவாக மதிப்பதில்லை.

    நாம் சொல்லும் காரணம் சாதாரணமானது எனக் கூறி நமது விடுப்பு கோரிக்கையை நிராகரித்து விடுவார்கள். உண்மையாகவே நமக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும்கூட, மனசாட்சியே இல்லாமல் “சரி பரவாயில்லை, அலுவலகத்திற்கு வந்து முடிந்த வேலையை செய்யுங்கள். இங்கு ஏற்கனவே ஆள் பற்றாக்குறை இருக்கிறது’’ என்று இரக்கமின்றி பதில் அளிக்கும் டீம் லீடர்கள் இங்கு அதிகம்.

    அதே சமயம், ஊழியர்களின் நியாயமான விடுப்பு கோரிக்கைகளை பரிசீலித்து, விடுப்பு எடுக்க அனுமதி அளிக்கும் மேலாளர்களும், டீம் லீடர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்ட தாராள மனப்போக்கு கொண்டவர்களிடம் என்றைக்குமே நாம் பொய் சொல்லி விடுப்பு எடுக்க நினைக்க மாட்டோம். உண்மையான காரணம் எதுவோ, அதைச் சொல்லி விடுப்பு பெறுவது நம் வழக்கமாக இருக்கும். அவர்களும் கூட அதை பெருந்தன்மையாக எடுத்துக் கொள்வார்கள்.

    இணையத்தில் வைரல் ஆகும் செய்தி

    இப்படியாக உண்மையை சொல்லி விடுப்பு எடுத்த நிகழ்வு குறித்த செய்தி தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனக்கு அனுப்பி வைத்த விடுப்பு விண்ணப்பத்தை சாஹில் என்பவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். நிச்சயமாக அந்த விடுப்பு விண்ணப்பம் உங்களை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    இந்த 5 தீவு நாடுகளையும் விசா இல்லாமல் இந்திய பாஸ்போர்ட் மூலம் சுற்றி பார்க்கலாம்!

    இண்டர்வியூ போகனும்

    மேலாளருக்கு ஊழியர் அனுப்பி வைத்திருந்த விண்ணப்பத்தில், “அன்பார்ந்த ஐயா, நான் இன்று வேறொரு நிறுவனத்திற்கு இன்டர்வியூ செல்ல இருப்பதால் எனக்கு விடுப்பு தேவைப்படுகிறது என்பதை இந்த இமெயில் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சாஹில், “என்னுடைய ஜூனியர்கள் இனிமையானவர்கள். இண்டர்வியூ செல்வதற்காக என்னிடம் விடுப்பு கேட்கின்றனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    நெட்டிசன்கள் பாராட்டு

    இந்தப் பதிவை பார்த்து நெட்டிசன்கள் பலர் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஊழியர் வெளிப்படுத்திய நேர்மையை பலர் பாராட்டி வருகின்றனர். நேர்மைக்கு இப்போதும் காலம் இருக்கிறது என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

    மற்றொரு பதிவாளர் வெளியிட்டுள்ள கமெண்டில், “எல்லா அலுவலகத்திலும், எல்லா மேலாளர்களும் இதுபோல பாசிடிவ் கண்ணோட்டத்தோடு பார்க்க மாட்டார்கள். எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடம் இப்படி கேட்பாய் என்று மிரட்டுவதோடு மட்டுமல்லாமல், நமக்கு ரிலீவிங் ஆர்டர் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்யக் கூடும். ஆகவே, சூழலை பொறுத்து பேச வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி