• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கொடிய விஷத்தன்மை கொண்ட தேளை செல்லப்பிராணியாக வளர்க்கும் இளைஞர்

கொடிய விஷத்தன்மை கொண்ட தேளை செல்லப்பிராணியாக வளர்க்கும் இளைஞர்

தேளை செல்லப்பிராணியாக வளர்க்கும் இளைஞர்!

தேளை செல்லப்பிராணியாக வளர்க்கும் இளைஞர்!

இளைஞர் ஒருவர் விஷத்தன்மை கொண்ட தேளை வளர்த்து வரும் வீடியோவை வெளியிட்டு மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

  • Share this:
சமீபகாலமாக நாய், பூனை, பறவை போன்ற செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் தான் இணையத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஏனெனில் விலங்குகளின் சிறிய விஷயங்கள் கூட முகத்தில் புன்னகையை வரவைக்கின்றன. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மட்டுமின்றி அனகோண்டாஸ் முதல் பாண்டாக்கள் மற்றும் புலிகள் முதல் ஃபென்னெக் நரிகள் வரை பல விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் ஒரு கலக்கு கலக்கி வருகின்றன.

மேலும், சிலர் பல பயங்கர உரியினங்களை கூட செல்ல பிராணிகளாக வளர்த்து வருவதும் உண்டு. இது பார்ப்பதற்கு வினோதமாக இருந்தாலும் சமீபத்தில் ஒரு டிக்டாக் யூசர் இதேபோன்ற ஒரு விஷத்தன்மை கொண்ட உயிரினத்தை வளர்த்து வரும் வீடியோவை வெளியிட்டு மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். அந்த நபர் மிகவும் ஆபத்தான விலங்குகளில் ஒன்றான டெத்ஸ்டாக்கர் தேளை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். தனது புதிய நண்பரை உலகிற்கு காண்பிக்கும் நோக்கத்தில், அந்த நபர் டிக்டோக்கில் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார் என்பதை லாடிபிள் பத்திரிகையில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: சாலையில் தலைகீழாக கவிழ்ந்த கார்.. காவல்துறையும், மக்களும் இணைந்து காரை திருப்பிய வைரல் வீடியோ!

மேலும் அவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோவில், "ஒரு நபருக்கு சொந்தமான மிகவும் ஆபத்தான செல்லப்பிராணிகளில் ஒன்றை நான் வாங்கியுள்ளேன். அது ஒரு ரப்பர் அளவில் மட்டுமே உள்ளது" என்று அவர் தனது தேளை பெட்டியிலிருந்து எடுத்து ஒரு பிளாஸ்டிக் கொள்கலனில் வைக்கும் போது கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இதனருகில் ஒருவர் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் விஷக் கொடுக்குகள் உள்ளன என்று கூறியிருக்கிறார்.

மேலும் அந்த வீடியோவில் தேள் மென்மையான பிளாஸ்டிக் மேற்பரப்பு மேல் நகரமுடியாமல் போனதால், அந்த விலங்கு காதலன், தனது புதிய செல்லப்பிராணியை ஒரு மைக்ரோ வாழ்விடத்தில் வைக்கப்போவதாக கூறியுள்ளார். செல்லப்பிராணிகளாக தேள் வளர்ப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் அந்த நபர் தன்னை பாலோ செய்பவர்களை எச்சரித்தார். ஒன்றை சொந்தமாக்குவதற்கு முன்பு, கொடிய காட்டு செல்லப்பிராணிகளை வளர்க்கும் அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவர் விரிவாகக் கூறினார்.

Also Read : WWE மல்யுத்த வீரரான தி கிரேட் காளியின் தாயார் தந்தி தேவி காலமானார்

இந்த பிராணியால் தாக்கப்படும் எந்தவொரு நபரும் அனாபிலாக்ஸிஸுக்கு ஆளாகிறார்கள். இது ஒரு தீவிர ஒவ்வாமை எதிர்விளைவாகும். இதுவே விரைவான மரணத்திற்கு காரணமாகவும் இருக்கலாம். பொதுவாக, இது போன்ற பிராணிகள் தாக்கும் போது நமைச்சல், சொறி, தொண்டை அல்லது நாக்கு வீக்கம், மூச்சுத் திணறல், வாந்தி, லேசான தலை, குறைந்த இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை ஏற்படுத்துகிறது.

Also Read : குழந்தையின் தனியே படியேறும் முயற்சியை தடுத்த புத்திசாலி நாய் - நெட்டிசன்கள் வியப்பு!

இந்த டெத்ஸ்ஸ்டாக்கர் தேள்களுக்கு மற்ற எந்த ஒரு தேளை விடவும் விஷம் அதிகம் என்பதால் எதிர்ப்பு சிகிச்சையும் இரு மடங்கு தேவைப்படுகிறது என்று அவர் மேலும் விளக்கினார். தீவிர குமட்டல், தலைச்சுற்றல், வயிற்றுப்போக்கு, வாந்தி, தசை பிடிப்பு, கணைய அழற்சி, இதயம் மற்றும் பிற நரம்பியல் பிரச்சினைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஒரு புல்லட் மூலம் சுடப்படுவதைப் போல தேள் கொட்டிய இடம் வலிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருப்பினும், காட்டு செல்லப்பிராணிகளுக்கான தேவை இத்தகைய இணைய வீடியோக்களால் அதிகரித்துள்ளது. இது காட்டு விலங்குகள் எவ்வளவு அபிமான வளர்ப்பு பிராணி என்பதைக் காட்டுகிறது. ஆனால் ஆபத்தான கவர்ச்சியான விலங்குகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது ஆபத்தானது. ஏனெனில் அவை மனிதர்களின் வாழ்விடங்களில் அல்லாமல் அவற்றின் இயற்கையான சூழலில் வாழவே உருவாக்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: