முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 20 ஆண்டுகளுக்கு மேல் ஒரே தட்டில் சாப்பிட்டு வந்த தாய் - கண்கலங்க வைக்கும் காரணம்

20 ஆண்டுகளுக்கு மேல் ஒரே தட்டில் சாப்பிட்டு வந்த தாய் - கண்கலங்க வைக்கும் காரணம்

வைரல் டிவிட்டர் பதிவு

வைரல் டிவிட்டர் பதிவு

20 வருடங்களாக தனது அம்மா ஒரே தட்டில் தான் சாப்பிட்டு வந்துள்ளார் என்பதை அவர் இறந்த பின் கண்டுபிடித்த மகன், அதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டு நெகிழ்வான தருணத்தைப் பதிவிட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுத் தட்டு, கப்புகள், போன்றவை சில காலங்கள் உபயோகப்படுத்தி பழைமை அடைந்தவுடன் அதனைத் தூக்கி போட்டுவிடுவோம். இப்படி இருக்க சமீபத்தில், ஒருவர்  20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தட்டில் தான் சாப்பிட்டு வந்துள்ளார் என்ற தகவல் பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அப்படி அவர் ஒரே தட்டில் நீண்ட நாட்களாக சாப்பிட என்ன காரணம் என்பது அவர் இறந்த பின்னர் தான் அவருடைய மகனுக்கு தெரிய வநதுள்ளது. உண்மை தெரிந்த மகன் அதை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

மனிதர்கள் வீடு மட்டுமல்லாமல் பொருட்கள் மீதும் உணர்வு பூர்வமாக இணைந்திருப்போம், பல்வேறு நினைவுகளும் இருக்கும். அத்தகைய சம்பவம் தான் தற்போது ட்விட்டரில் வைரலாக பரவி நெட்டிசன்களை கண்கலங்க வைத்திருக்கிறது. விக்ரம் புத்தநேசன் என்ற ட்விட்டர் யூஸர் ஒருவர் தனது அம்மா 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தட்டைத் தான் பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பதைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார். அவரது அம்மா சமீபத்தில் இறந்துள்ளார், அதன் பிறகு தான் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. அவருடைய பதிவில் ‘இது என்னுடைய அம்மா சாப்பிடும் தட்டு; இதில் தான் அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாப்பிட்டு வந்திருக்கிறார். இந்த தட்டு மிகவும் சிறியதாக இருந்தாலும் இதை மட்டுமே அவர் பயன்படுத்தி இருக்கிறார்.

அம்மாவைத் தவிர எனக்கும், என் சகோதரி ஸ்ருதிக்கும் மட்டுமே இதில் சாப்பிட அனுமதி இருக்கிறது. இதைத் தவிர இந்த தட்டை வேறு யாரும் பயன்படுத்த அவர் அனுமதிக்கமாட்டார். ஆனால் அவர் இறந்த பிறகுதான் இந்த தட்டு பற்றிய விவரம் எனக்கு தெரிய வந்துள்ளது.

1997 ஆம் ஆண்டில் நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்போது இந்த தட்டு நான் பள்ளியில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் எனக்கு பரிசாக வழங்கப்பட்டது. அதன் பிறகு 24 ஆண்டுகளாக அம்மா நான் வெற்றி பெற்ற இந்த தட்டில் மட்டும் தான் சாப்பிட்டு வந்திருக்கிறார்.

இதைப் பற்றி எனக்கு இவ்வளவு காலமாக தெரியவே இல்லை. அம்மாவும் என்னிடம் சொல்லவில்லை. அம்மாவை போன்ற ஒரு அன்பான இனிமையான பெண்மணியை பார்க்க முடியாது. மிஸ் யூ அம்மா’ என்று உருக்கமாக ட்விட்டர் இல் பதிவு செய்து அந்த தட்டின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

அம்மாவின் அன்புக்கு ஈடு இணையில்லை, அம்மா மட்டும் தான் நிபந்தனையில்லாத அன்பைத் தருவார்கள், அம்மாவின் அன்பை எதற்கும் ஒப்பிட முடியாது என்று நெட்டிசன்கள் கண்கலங்கி, தங்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

First published:

Tags: Mother, Trending, Viral