கால்பந்துடன் மூன்வாக் செய்த கயானா இளைஞர் - கின்னஸ்ஸில் இடம்பிடிப்பு!

அபுபக்கர் தரூர்

பாப் சிங்கர் மற்றும் டான்சரான மைக்கேல் ஜாக்சனின் டிரேட் மார்க் மூவ்களில் ஒன்று மூன்வாக்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கால்பந்தை தலையில் வைத்தவாறு கயானா இளைஞர் செய்த மூன்வாக் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற பாப் சிங்கர் மற்றும் டான்சரான மைக்கேல் ஜாக்சனின் டிரேட் மார்க் மூவ்களில் ஒன்று மூன்வாக். இந்திய அளவில் பிரபல நடன இயக்குநர் பிரபுதேவா, மூன்வாக்கை அசால்டாக செய்யக்கூடியவர். நடனத்துறையில் சாதிக்க விரும்பும் ஒவ்வொருவரும் மூன் வாக் நடனத்தை, ஒருமுறையாவது முயற்சி செய்யாமல் இருந்திருக்க மாட்டார்கள். இந்நிலையில், கயானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்வாக்கைக் கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கால்பந்தை தலையில் வைத்தவாறு அவர் செய்யும் மூன்வாக் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவரின் அசாத்திய திறமையை கின்னஸ் குழுவும் அங்கீகரித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கயானாவைச் சேர்ந்தவர் அபுபக்கர் தரூர் (Aboubacar Traore). நடனத்தில் தேர்ந்த கலைஞராக இருக்கும் அவர், தன்னுடைய நடன வீடியோக்களை சமூகவலைதளங்களிலும் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில், கடந்த 2019ம் ஆண்டு சாண்டியாகோ நகரில் கால்பந்து ஒன்றை தலையில் வைத்தவாறு, சுமார் 32 ஸ்டெப்ஸ் மூன்வாக் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் கால்பந்தைக் கொண்டு அவர் செய்யும் ஒவ்வொரு மூவ்களும், பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.

இதனை சாதனையாக அங்கீகரித்த கின்னஸ் குழு, அபுபக்கரின் பிரபலமான கின்னஸ் மூன்வாக் வீடியோவை தன்னுடைய சமூகவலைதளங்களிலும் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போதும் பல லைக்ஸ்களும், பார்வைகளையும் குவித்து வருகிறது. அண்மையில் சமூகவலைதளங்களில் பரவிய மற்றொரு வீடியோவில், இந்தியாவைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், மதுபோதையில் மூன்வாக் செய்திருந்தார். இந்த வீடியோவை ரசித்த நெட்டிசன்கள், இதுபோன்ற பலரின் திறமைகள் வெளியுலகுக்குக் தெரியாமலேயே இருப்பதாகவும், சமூகவலைதளங்களின் உதவியால் அவை தற்போது வெளிச்சத்துக்கு வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளனர்.

Also read... தோனி கிச்சடி முதல் பாண்டியா பத்ரா வரை - மெனுவில் கலக்கும் அகமதாபாத் உணவகம்!

மூன் வாக்கிற்கு அடையாளமாக திகழும் மைக்கேல் ஜாக்சன், கலைத்துறையில் செய்த சாதனைகள் ஏராளம். 1971 ஆம் ஆண்டு 11 வயதில் இசைத்துறையில் காலடி எடுத்துவைத்த அவர், இன்டிபென்டன்ட் (independent) எனப்படும் சுயாதீன இசைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார். 1972 ஆம் ஆண்டு வெளியான 'காட் டு தி தேர்' (Got to be there), 1979 -ல் வெளியான 'ஆப் தி வால்' (Of the wall), 1982-ல் வெளியான 'திரில்லர்' (thriller), 1987 -ல் வெளியான 'பேட்' ஆகிய ஆல்பங்கள் உலக அளவில் பெரும் சாதனை படைத்தன. குறிப்பாக, 1991-ல் வெளியிடப்பட்ட 'டேஞ்சரஸ்' மற்றும் 1995-ல் வெளியான 'ஹிஸ்டரி' போன்ற ஆல்பங்கள் விற்பனையின் உச்சத்தை தொட்டன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: