காதலுக்கு புனேவின் கமிஷ்னரை தூது விட்ட இளைஞர்... எப்படி என்று யோசிக்கிறீர்களா?

காதலுக்கு புனேவின் கமிஷ்னரை தூது விட்ட இளைஞர்... எப்படி என்று யோசிக்கிறீர்களா?

காதலுக்கு புனேவின் கமிஷ்னரை தூது விட்ட இளைஞர்.

குப்தாவின் ட்வீட் சில நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, இதுபோன்ற கேள்விக்கு கமிஷனர் ஏன் பதிலளித்தார் என்று சிலர் கேட்டிருக்கிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் பொதுமக்களின் குறைகளை புனேவின் கமிஷ்னர் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் அவரிடம் தன் காதலுக்கு உதவி கேட்ட நிகழ்வும், அதற்கு கமிஷனர் சொன்ன பதிலும் சமூகவலைத்தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. மார்ச் 8, திங்கட்கிழமை, புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா #LetsTalkCPPuneCity என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக ட்விட்டர் நேரலையிலிருந்த அமிதாப் குப்தாவிடம், பெண்கள் பாதுகாப்பு, தலைக்கவசம் பயன்பாடு, பொதுமக்களிடம் காவல்துறையின் அணுகுமுறை உள்ளிட்டவை தொடர்பாகப் பொதுமக்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது லைவில் வந்த இளைஞர் ஒருவர் , ''தான் காதலிக்கும் பெண்ணிடம் காதலை ஏற்றுக்கொள்ள உதவி செய்யுமாறு'' காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் போலீஸ் அதிகாரி குப்தாவின் சிந்தனைமிக்க பதில் அவருக்கு பொதுமக்களிடமிருந்து அதிக மரியாதையையும் கைதட்டலையும் பெற்றுத்தந்தது. இந்த கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்காத ஆணையர் அமிதாப் குப்தா, பெண்களின் விருப்பம் இல்லாமல் அவர்களைத் தொல்லை செய்யக் கூடாது என்று கூறி ‘நோ மீன்ஸ் நோ' என்ற வசனத்தையும் கூறி பாடம் எடுத்தார். மேலும் பெண்களின் விருப்பத்திற்கு எதிராக எதுவும் செய்ய வேண்டாம் என்று அந்த ஆணுக்கு அறிவுறுத்தினார்.

மார்ச் 8 அன்று, குப்தா ட்விட்டரில், “துரதிர்ஷ்டவசமாக, சம்மந்தப்பட்ட பெண்ணின் அனுமதியின்றி, நாங்கள் எந்த உதவியும் செய்ய முடியாது. அவளுடைய விருப்பத்திற்கு எதிராக நீங்கள் எதுவும் செய்யக்கூடாது." என்றும் உங்களின் ப்ரோபோசலுக்கு அந்தப்பெண் எப்போதாவது ஒப்புக் கொண்டால், உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் உண்டு என்று கூறினார். மேலும் அந்த ட்வீட்டை ‘#ANoMeansNo’ உடன் சேர்த்து இண்டெர்நெட்டை தெறிக்க விட்டுள்ளார்.

Also read... 30 கி.மீ லாரியில் தொங்கிச் சென்ற நபர்... லாரி மோதியதில் மனைவி உயிரிழப்பு!

அந்தக் கேள்வியானது அசல் ட்வீட் யூசரால் நீக்கப்பட்டது. குப்தாவின் பதில் ட்வீட்டை இங்கே பாருங்கள்:

குப்தாவின் ட்வீட் சில நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, இதுபோன்ற கேள்விக்கு கமிஷனர் ஏன் பதிலளித்தார் என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ அதிகாரியின் நேர்மையான பதில் உண்மையில் பாராட்டத்தக்கது என்றுள்ளனர். இன்னொரு யூசர், அந்த பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் அவருக்கு ‘தீங்கு செய்யவோ’ ‘அவதூறாக பேசவோ’ வேண்டாம் என்று அந்த நபரை எச்சரிக்க வேண்டும் என்று எழுதினார். மற்றொரு பெண் யூசர் இந்த பதிலைப் பாராட்டியதோடு, அதிகாரியின் ட்வீட் துன்புறுத்தலுக்கு எதிரான செய்தி என்று எழுதினார்.போலீஸ் அதிகாரியின் இந்த பதிலுக்கு பல பெண்கள் நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக்கொண்டனர். பெண்ணின் விருப்பங்களை மதிக்க ஆணுக்கு நல்ல முறையில் நீங்கள் அறிவுறுத்தியுள்ளீர்கள் என்றும் மற்றொரு யூசர் அவரது ‘ANoMeansNo’ என்ற பதிலைப் பாராட்டினார். இதுமட்டுமல்லாது இந்த பொதுமக்களுடனான மீட்டிங் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது, அப்போது கோவிட் விதிகள், பெண்களின் பாதுகாப்பு, விதிகளை மீறுதல் என பலதரப்பட்ட கேள்விகளுக்கும் குப்தா பதிலளித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: