• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கால்வாயில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றி அதன் தாயிடம் ஒப்படைத்த நபர் - வைரல் வீடியோ!

கால்வாயில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றி அதன் தாயிடம் ஒப்படைத்த நபர் - வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : முட்டி அளவுக்கு தண்ணீர் உள்ள ஒரு கால்வாய் பகுதியில் தவறுதலாக விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றி அதன் தாயிடம் ஒப்படைத்த நபருக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

  • Share this:
சமூக வலைத்தளங்களில் பல்வேறு வகையான தகவல்கள் அவ்வப்போது வைரலாகி வரும். குறிப்பாக வீடியோக்கள், மீம்ஸ், புகைப்படங்கள், கவிதை வரிகள் ஆகியவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும். இதில் உள்ள தகவல் நமது மனதுடன் எதோ ஒரு வகையில் இணைந்தால் மட்டுமே இவை வைரலாகும். இல்லையேல் நாம் அன்றாடம் ஸ்க்ரோல் செய்யும் பலவற்றில் ஒன்றாக இவை இருந்து விடும்.

வீடியோக்கள் மிக விரைவில் வைரலாக காரணம் அதில் உள்ள கதாபாத்திரங்களை பொறுத்து தான். முக்கியமாக மனித நேய நோக்கம் கொண்ட வீடியோக்கள், பிறருக்கு உதவ கூடிய வீடியோக்கள், நட்பு அடிப்படையில் உள்ள வீடியோக்கள், இயற்கை சார்ந்த வீடியோக்கள் போன்றவை எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமானவை.

அந்த வகையில் சக மனிதர்களுக்கு உதவும் வீடியோக்களே பல லட்சம் பேரை சென்றடையும் போது, சின்ன நாய்க்குட்டியை காப்பாற்றும் வீடியோ சட்டென பலரின் மனதை கவர்ந்து விடும். இப்படி ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், முட்டி அளவுக்கு தண்ணீர் உள்ள ஒரு கால்வாய் பகுதியில் தவறுதலாக சின்ன நாய்க்குட்டி ஒன்று விழுந்து விட்டது. மேல் பகுதியில் நின்று கொண்டு அதன் தாய் நாய் ரொம்ப நேரமாக உதவிக் கேட்கும் குரலில் கத்திக் கொண்டே இருந்தது.



நாய்க்குட்டி தவறி விழுந்த அந்த கால்வாய் ஆழமாக இருந்ததால், அது மேல ஏறி வர முடியாமல் தவித்தது. இந்த வீடியோவை பார்க்கும் யாராக இருந்தாலும் இன்னும் சற்று நேரத்தில் அந்த குட்டி நாய் கால்வாய்க்குள் சிக்கி கொண்டு உள்ளே போக போகிறது என்றே நினைத்திருப்பார்கள். கொஞ்ச நேரம் தவறி இருந்தாலும் அந்த நாய்க்குட்டியின் உயிர் நிச்சயம் போயிருக்கும்.



ஒரு புறம் தாய் நாய் கத்தி கொண்டிருக்க மறுபுறம் நாய்க்குட்டி அழுகின்ற குரலில் கத்த தொடங்க, வழியில் சென்ற ஒருவர் இதை கேட்டதும் அங்கே இறங்கி பார்த்துள்ளார்.



பின்னர் தனக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத அந்த சின்ன நாய்க்குட்டியை காப்பாற்ற, சற்றும் யோசிக்காமல் முட்டி அளவு உள்ள நீரில் இறங்கி கால்வாயில் சிக்கி கொண்ட நாய்க்குட்டியை மெதுவாக தூக்கி கொண்டு பாதுகாத்து விட்டார்.



பிறகு மேலே இருந்து கத்தி கொண்டிருந்த தாய் நாயிடம், மிக கடினமாக அந்த கால்வாயை கடந்து சென்று நாய்க்குட்டியை அதனிடம் சேர்த்து விட்டார்.



தனது தாயிடம் சேர்ந்த நாய்க்குட்டி ஒரு வழியாக மன நிம்மதி அடைந்தது. முகம் தெரிந்த நபர் ஆபத்தில் இருந்தாலே நம்மில் பலர் அவர்மேல் இருக்கும் சிறு வெறுப்பின் காரணமாக அவரை கண்டு கொள்ளாமல் சென்று விடுவோம்.



ஆனால் இந்த நபர் சின்ன நாய்க்குட்டிக்கு செய்த உதவி மிக நெகிழ்வானது. இந்த வீடியோ மூலம், யார் ஆபத்தில் இருந்தாலும் ஒரு நொடிக் கூட யோசிக்காமல் அவரை காப்பாற்ற வேண்டும் என்கிற மனித மாண்பை நமக்கு நினைவுப்படுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: