Home /News /trend /

சிறுதுளி தண்ணீரைக் கொடுத்து பறவையின் உயிரை காப்பாற்றிய நபர் - வீடியோ வைரல்!

சிறுதுளி தண்ணீரைக் கொடுத்து பறவையின் உயிரை காப்பாற்றிய நபர் - வீடியோ வைரல்!

Bird

Bird

Viral Video | வெயிலின் தாக்கத்திற்கு பறவைகள் பலியாகின்றன என்பதும், மனிதர்களின் சிறு உதவிகூட அவற்றை காப்பாற்றும் என்பதற்கும் உதாரணமாக இந்த நிகழ்வு உள்ளது. அத்தகைய உதவியை செய்த அந்த அடையாளம் தெரியாத நபரை, டிவிட்டர் பயனாளர்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
சுட்டெரிக்கும் வெயிலால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் மற்றும் பறவைகள் அவதியடைய நேரிடுகிறது. குறிப்பாக கால்நடையாக சுற்றித் திரியும் விலங்குகளும், நீர்நிலைகள் அற்ற பகுதிகளில் வாழும் பறவைகளும் தான் இந்த வெயில் காலத்தில் மிகுந்த பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. இதுபோன்ற உயிரினங்களுக்கு நாம் செய்யக் கூடிய சிறு உதவி என்பது, அவற்றின் உயிரை காக்கும். ஆகவே தான், கோடை காலத்தில் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளுக்கு வெளியே மற்றும் பால்கனி பகுதிகளில் பறவைகளுக்காக சிறு பானைகளில் தண்ணீர் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுபோல தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த பறவை ஒன்றுக்கு, நல்லெண்ணம் கொண்ட நபர் ஒருவர் பாட்டில் மூலமாக தண்ணீரை ஊற்றுகிறார். ஏறத்தாழ மயக்க நிலையில் இருந்த அந்தப் பறவை தண்ணீர் துளிகள் கிடைத்ததும் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.

இதுதொடர்பான வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா அண்மையில் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “சில துளி தண்ணீர், அதன் சொந்த வரலாற்றை அது எழுதினால்’’ என்று தலைப்பிட்டிருக்கிறார்.வெயிலின் தாக்கத்திற்கு பறவைகள் பலியாகின்றன என்பதும், மனிதர்களின் சிறு உதவிகூட அவற்றை காப்பாற்றும் என்பதற்கும் உதாரணமாக இந்த நிகழ்வு உள்ளது. அத்தகைய உதவியை செய்த அந்த அடையாளம் தெரியாத நபரை, டிவிட்டர் பயனாளர்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

Also Read : ஜிக் செய்து குரங்கை அசரடித்த இளைஞர் - வீடியோ

இதுகுறித்து டிவிட்டர் பயனாளர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “இது மிகவும் அழகான விஷயம். பறவைகள், அணில்கள் மற்றும் சிறு விலங்குகளுக்கு எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் என்னாகும் என்ற கேள்வி எழுகிறது. அதுபோன்ற உயிரினங்களுக்காக தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read : 5 ஆண்டுகளுக்கு பிறகு தன்னை வளர்த்தவருடன் இணைந்த நாய்..

மற்றொரு பதிவாளர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு துளி தண்ணீரும் முக்கியமானது. தண்ணீரை சேமிப்போம். உயிரை காப்பாற்றுவோம்’’ என்று தெரிவித்துள்ளார். கோடையில் வாடும் உயிரினங்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவுவது இது முதல்முறை அல்ல. அண்மையில், மும்பை அருகே சாலையோரடத்தில் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த குரங்கிற்கு போக்குவரத்து காவலர் ஒருவர் இதேபோல வாட்டர் கேன் மூலமாக தண்ணீர் கொடுத்து உதவினார்.இதேபோன்று, காயமுற்ற பறவை ஒன்றுக்கு, ஒருவர் மருந்து போட்டு காப்பாற்றுவது தொடர்பான வீடியோ ஒன்றை, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அண்மையில் பகிர்ந்திருந்தார். கோடை காலத்தில் நம் வீட்டு மொட்டை மாடியிலும் கூட நிழல் உள்ள பகுதி, மரத்து நிழல் போன்ற இடங்களில் சிறு பாத்திரங்களில் குளுமையான தண்ணீர் நிரப்பி வைக்கலாம். தினசரி காலை அல்லது சூரியன் மறையும் மாலை வேளைகளில் காலியிடங்களில் தானியங்களை தூவி வைத்தால், பறவைகளுக்கு அது உதவிகரமாக இருக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Birds, Summer, Trending Video

அடுத்த செய்தி