செல்லப் பிராணிகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அவை செய்கின்ற சேட்டைகள் முதல் துள்ளி விளையாடும் அழகு வரை நம்மை எப்போதும் இவை மெய் சிலிர்க்க வைத்து விடும். செல்லப் பிராணிகளை வளர்க்கின்றவர்களின் வீடுகளில் எந்நாளும் கொண்டாட்டமாக காட்சி அளிக்கும். அதிலும் ஒரே வீட்டில் குழந்தைகளும் செல்லப் பிராணிகளும் இருந்து விட்டால் அவ்வளவு தான். பொதுவாக செல்லப் பிராணிகளை வீட்டிலே விட்டுட்டு வெளியில் செல்வது என்பது சற்று கடினமான ஒன்று. ஏனென்றால் அவை தனிமையில் இருப்பதால் அசௌகரியமான உணர்வை பெற கூடும்.
இதனால் பலர் வெளியூருக்கு செல்லும்போது தனது செல்லப் பிராணிகளை பெட் ஹவுஸ் என்று சொல்லப்படும் செல்லப் பிராணிகளை பராமரிக்கும் இடங்களில் விட்டு சென்று விடுவார்கள். ஆனால் சிலருக்கு இது போன்று தனியாக விட்டு செல்ல மனமில்லாமல், தன்னுடனே அவற்றை வெளியூருக்கும் அழைத்து செல்வார்கள். சாதாரணமாக கார் அல்லது பைக்கில் தன்னுடன் செல்லப் பிராணிகளை அழைத்து செல்பவர்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒருவர் தன் செல்லப் பிராணிக்கு விமானத்தில் டிக்கெட் எடுத்து அதை தன்னுடனே பாதுகாப்பாக பயணம் செய்ய அழைத்து சென்றுள்ளார்.
மிக சில விமானங்களில் செல்லப் பிராணிகளையும் அழைத்து செல்வதற்கான வசதி தரப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட விமானத்தை தான் இந்த நபர் தேர்தெடுத்துள்ளார். இவரது செல்லப் பிராணியான பூனையை கண்ணாடி பையில் வைத்து கொண்டு கூட்டி சென்றுள்ளார். மேலும் இந்த பையை தனது தோள்பட்டையில் மாட்டி கொண்டு விமானத்தில் ஏறியுள்ளார். இதை வீடியோவாக படம் எடுத்து ரெட்டிட் சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், மிகவும் கொழுகொழுவான பிரவுன் மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள பூனை ஒன்றை கண்ணாடி பைக்குள் வைத்து கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைகிறார். விமான நிலையத்தின் உள்ளும், விமானத்தில் ஏறிய பிறகும் அந்த பூனை மிகவும் சமத்தாக கண்ணாடி பைக்குள் இருந்துள்ளது. இதை வீடியோவாக பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே வைரலாக தொடங்கி விட்டது. சுமார் 13,000 பேர் ரெட்டிட் தளத்தில் இந்த பதிவிற்கு அப்வோட் செய்துள்ளனர். மேலும் பலர் இந்த வீடியோவை பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்தும் வருகின்றனர்.
Also read... 84-வது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய ரத்தன் டாடா - நெட்டிசன்கள் புகழாரம்!
அதில் ஒருவர், "நீங்கள் என் விமானத்தில் ஏறுவதை நான் பார்த்திருந்தால், நீங்கள் என் அருகில் அமர்ந்திருக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்திருப்பேன்" என கமெண்ட் போட்டுள்ளார். இன்னொரு நபர், "நான் அந்த பூனையாக இருந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் சிலர் பூனையின் உரிமையாளரான அந்த நபரின் அன்பையும், பாசத்தை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
எது எப்படியோ, பெரியவர்களே விமானத்தில் பயணம் செய்ய அதிகம் பயப்படும்போது, அந்த பூனை இவ்வளவு சமத்தாக விமானத்தில் பயணம் செய்ததற்கு நிச்சயம் அதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.