நாட்டில் அசுர வளர்ச்சி கண்ட டிக்டாக் தடை செய்யப்பட்டடாலும், அந்த இடத்தை இப்போது இன்ஸ்டா ரீல் பிடித்துள்ளது. சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்ஸ் ஆயிரக்கணக்கான வியூஸ்கள் மற்றும் லைக்ஸ்களை பெற யூஸர்களை கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்கின்றனர்.
சிலர் மக்கள் மத்தியில் விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விஷயங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கி அப்லோட் செய்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர் தங்களுடைய கன்டென்ட் மற்றும் வீடியோக்களால் மக்களை சிரிக்க வைக்கவும், மகிழ்விக்கவும் முயற்சிக்கின்றனர். இதற்காக அவர்கள் செய்யும் முயற்சிகள் சில நேரங்களில் நியமானதாக இருந்தாலும், பல நேரங்களில் ஏற்று கொள்ள முடியாததாக இருக்கிறது.
ஏனென்றால் பொது இடம் என்று கூட யோசிக்காமல் ஃபன் என்ற பெயரில் மக்கள் மற்றும் யூஸர்களை கவருகிறேன் என்கிற பெயரில் பல தேவையற்ற விஷயங்களை செய்து அருகில் இருப்போர் மற்றும் யூஸர்களையும் கூட முகம் சுளிக்க வைக்கிறார்கள். அந்த வகையில் தற்போது வேடிக்கை என்ற பெயரில் தினசரி ஆயிரகணக்கான மக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்து ஒன்றில் எடுக்கப்பட்ட இன்ஸ்டா ரீல் வைரலாகி வருகிறது.
Read More : மெட்ரோ ரயிலில் ‘க்யூட்’ செல்ஃபி.. வைரலாகும் வயதான தம்பதியின் ரியாக்ஷன்ஸ்
டெல்லி மெட்ரோவில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இப்படிப்பட்ட பொதுப்போக்குவரத்தான மெட்ரோவில் சமீபத்தில் மேலாடையாக ஃபுல்-ஹேண்ட் பனியன் மற்றும் கீழாடையாக இடுப்பில் டவலை மட்டுமே அணிந்து கொண்டு ஒரு இளைஞர் ரயிலில் ஏறும் வீடியோ ஒன்று வைரலாகி சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பிட்ட வீடியோவில் டெல்லி மெட்ரோவில் ஏறும் தனது இடுப்பில் மஞ்சள் நிற டவலை மட்டுமே கட்டி கொண்டு ஏறும் இளைஞர், சர்வ சாதாரணமாக பயணிகள் முன்னிலையில் நடந்து செல்வதை காண முடிகிறது.
ஆண்கள், பெண்கள் என ரயில் முழுவதும் பயணிகள் இருந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் ரயில் பேட்டி முழுவதும் உலாத்துகிறார், ரயிலின் ஜன்னல் கண்ணாடியை பார்த்து தனது தலைமுடியை ஸ்டைல் செய்து கொள்கிறார். இவரது இந்த வினோதமான நடவடிக்கியை பார்த்து மெட்ரோவில் இருக்கும் பல பெண்கள் பயங்கரமாக சிரிப்பதையும் நம்மால் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. mohitgauhar என்ற இன்ஸ்டா அக்கவுண்டில் இருந்து ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஸ்டா ரீல், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ள அதே நேரம் ஏராளமான நெகட்டிவ் கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.
View this post on Instagram
ஒரு சில யூஸர்கள் இதை வேடிக்கையாக எடுத்து கொண்டுள்ள நிலையில், பல யூஸர்கள் சோஷியல் மீடியா மோகத்தில் லைக்ஸ்களை குவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இப்படிப்பட்ட உடையில் ஒரு நபர் பொது இடத்தில் நடமாடுவது அதிர்ச்சியாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள். மேலும் சிலர் சோஷியல் மீடியாக்களில் எவ்வளவோ கன்டென்ட் கிரியேட்டர்கள் நல்ல விஷயங்களை பற்றி கூறுகிறார்கள் அல்லது செய்கிறார்கள். அந்த வீடியோக்களுக்கு வியூஸ் மற்றும் லைக்ஸ் எதிர்பார்க்கும் அளவிற்கு கிடைப்பதில்லை.
ஆனால் இது போல கோமாளித்தனம் செய்யும் வீடியோக்களுக்கு கிடைக்கும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களால் அவை வைரலாவது, நம்முடைய சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கவலையை தங்களுக்குள் ஏற்படுத்துவதாக கூறி இருக்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.