உலக சாதனைகளின் பட்டியலில் வாய்பிளக்க வைக்கும் சாதனை முதல் மிக மிக வினோதமான சாதனைகள் வரை எக்கச்சக்கமானவை உள்ளன. இப்படி எல்லாம் கூட செய்ய முடியுமா என்று சில வேடிக்கை மனிதர்களின் செயல்பாடுகள் இருக்கும். அந்த வரிசையில், உலகின் மிகப்பெரிய சைக்கிள் ஒன்றைத் தயாரித்து, அதை ஓட்டியும் காட்டியுள்ளார் ஆடம் ஸ்டானோவிச்.
உலகின் மிக உயரமான சைக்கிளை ஓட்டிச் செல்லும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டவுடன், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆடம் ஸ்டானோவிச். இன்ஸ்டாகிராம் பதிவில் ஆடம்
7.41 மீ (24 அடி 3.73 அங்குலம்) உயரமான சைக்கிள் என்று கேப்ஷன் மட்டுமே குறிப்பிட்டு விடியோவை பகிர்ந்திருந்தார். கூடுதல் விவரங்களை அடுத்தடுத்த கேள்விகள் எழும்போது பதிலாகச் சேர்த்தார்.
இது தான் உருவாக்கி, வடிவமைத்ததில் இந்த சைக்கிள் தான் மிகப்பெரிய மற்றும் விசித்திரமான தயாரிப்பு என்று ஆடம் கூறியுள்ளார். சைக்கிளை அவர் ஓட்டிச் சென்றது ஒரு மிகப்பெரிய சவாலாகவும், சிறந்த சாகசப் பயணம் மேற்கொண்டது போலவும் இருந்தது என்று அவர் விவரித்துள்ளார்.
Also Read : ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு.. சரியான நேரத்தில் காப்பாற்றிய பெண் பயணி - வைரல் வீடியோ
ஆடமிற்கு எல்லாமே மிகவும் பெரிதாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது. '
எனது யோசனைகளை புதிய உயரத்திற்கு உயர்த்துவது எனக்கு மிகுந்த நிறைவையும் திருப்தியையும் தருகிறது. எனது கனவுகளை நனவாக்குவது புதிய அற்புதமான விஷயங்களை முயற்சிக்க என்னைத் தூண்டுகிறது’ என்று உலகின் உயரமான சைக்கிள் வடிவமைப்பில் ஈடுபடக் காரணத்தைக் கூறுகிறார் ஆடம் ஸ்டானோவிச்.
சைக்கிள் வடிவமைக்கப் போகிறேன் என்று முடிவு செய்த பிறகு, முழு வடிவத்தையும் திட்டமிட்டு முடிக்கவே ஒரு மாதம் ஆனதாகத் தெரிவித்தார். பின்னர், அதற்கு உருவம் கொடுத்து வடிவமைக்க மற்றுமொரு மூன்று வாரங்கள் தேவைப்பட்டது. உலக சாதனையில் இடம்பிடித்த இந்த சைக்கிளை உருவாக்க முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்தியதாக ஆடம் தெரிவித்தார்.
Also Read : லிப்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய இருவர்.. 10 வினாடியில் ஆட்டம் முடிந்தது
ஒரு குறிப்பிட்ட உயரம் இருந்தாலே, சரியாக பேலன்ஸ் செய்ய வராது. உதாரணமாக, உலகின் உயரமான மனிதரால் கால்களை வைத்து பேலன்ஸ் செய்து நடக்க முடியாது. ஸ்டிக் அல்லது வாக்கர் பயன்படுத்தித் தான் நடக்கிறார். அப்படி இருக்கையில் எவ்வாறு 7 அடி உயர சைக்கிளின் வடிவம் சரியாக பேலன்ஸ் தருவது போல இருக்க வேண்டும். சைக்கிளின் வடிவம் அல்லது தோற்றம் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆடம் பகிர்ந்த வீடியோ இணைப்பு மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
உலகின் உயரமான சைக்கிளின் வைரலாகும் வீடியோ இங்கே..
வீடியோ பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில், எக்கச்சக்கமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. 57,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்ற வீடியோ, தற்போது பலராலும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, வீடியோவைப் பார்த்து அசந்த யூசர்கள் தங்கள் கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.