மூங்கில் குச்சிகளால் ஆன மிகவும் உயரமான சைக்கிள்... அநாயசமாக ஓட்டிக்காட்டிய இளைஞர்!

அந்த இளைஞரின் வீடியோ ட்விட்டரில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.

மூங்கில் குச்சிகளால் ஆன மிகவும் உயரமான சைக்கிள்... அநாயசமாக ஓட்டிக்காட்டிய இளைஞர்!
(Twitter/@aimanmokhtar11)
  • News18
  • Last Updated: December 2, 2019, 3:42 PM IST
  • Share this:
மூங்கில் குச்சிகளால் சுமார் 10 அடிக்கு மேலான உயரத்தில் ஒரு சைக்கிளை உருவாக்கி அதை இளைஞர் ஒருவர் அநாயசமாக ஓட்டிக் காண்பித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சைக்கிளின் டயர் பொருத்தப்பட்டு அதில் மூங்கில் குச்சிகளால் உயரமான சைக்கிளை அந்த இளைஞர் வடிவமைத்துள்ளார். உயரமான சைக்கிளில் பேலன்ஸ் இல்லாது முதலில் விழுவது போல் இருந்தாலும் சமாளித்து அந்த இளைஞர் சைக்கிளை இயக்கும் லாவகம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

சைக்கிளை உருவாக்கியது மட்டுமல்லாது அதைத் திறம்பட இயக்கத் தெரிந்த அந்த இளைஞரின் வீடியோ ட்விட்டரில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. இது பழைய வீடியோ காட்சி என்றாலும் திடீரென ட்விட்டரில் மீண்டும் வைரல் பட்டியலில் உலவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: வாட்ஸ்அப் செயலியில் வெளியாகும் அடுத்தடுத்த அப்டேட்ஸ்!
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading