ஹெல்மெட்-க்குள் விஷப்பாம்பு... அறியாமல் 11 கி.மீ வரை பைக் ஓட்டியவருக்கு என்ன ஆனது தெரியுமா?

கேரளாவில் இதுபோல் ஷூ, ஹெல்மெட், கார், பைக்கினுள் பாம்பு புகுவது இது முதன்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெல்மெட்-க்குள் விஷப்பாம்பு... அறியாமல் 11 கி.மீ வரை பைக் ஓட்டியவருக்கு என்ன ஆனது தெரியுமா?
ஹெல்மெட்-க்குள் பாம்பு
  • News18
  • Last Updated: February 12, 2020, 2:50 PM IST
  • Share this:
கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது ஹெல்மெட்டுக்குள் விஷப்பாம்பு ஒன்று இருப்பதை அறியாமல் அதைமாட்டிக் கொண்டு பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.

விஷப்பாம்பு இருப்பதை அறியாமல் 11 கி.மீ வரை பயணித்துள்ளார் அந்த ஆசிரியர். பள்ளியில் வகுப்பை முடித்துவிட்டு கிளம்பியவருக்கு 11-வது கி.மீ தூரத்தில் வண்டியை நிறுத்திய பின்னரே ஹெல்மெட்டுக்குள் நசுங்கி செத்துக்கிடந்த பாம்பை பார்த்துள்ளார்.

செத்துக்கிடந்த பாம்பை பார்த்து அதிர்ந்த அந்த ஆசிரியர் மயங்கி விழுந்துள்ளார். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். பாம்பிடம் இருந்து தப்பித்த அந்த ஆசிரியர் நலம் பெற்றதும் முதல் வேலையாகத் தனது ஹெல்மெட்டை தீ வைத்து எரித்துள்ளார்.

கேரளாவில் இதுபோல் ஷூ, ஹெல்மெட், கார், பைக்கினுள் பாம்பு புகுவது இது முதன்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: பறக்கும் விமானத்தை நேரடியாகத் தாக்கும் மின்னல்... வைரல் வீடியோ!
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்