Home /News /trend /

"ஐ லவ் டெல்லி" செல்ஃபி பாயின்ட்டில் இருந்து மிஸ்ஸான இதயம்.! வைரலாகும் இளைஞரின் செயல்

"ஐ லவ் டெல்லி" செல்ஃபி பாயின்ட்டில் இருந்து மிஸ்ஸான இதயம்.! வைரலாகும் இளைஞரின் செயல்

தற்காலிக பேப்பர் இதயத்துடன் கூடிய I love Delhi போஸ்ட்

தற்காலிக பேப்பர் இதயத்துடன் கூடிய I love Delhi போஸ்ட்

I Love Delhi Selfie Point | சமீபத்தில் ‘I love Delhi' பலகையில் இருந்த இதய வடிவிலான அடையாளம் திருடப்பட்டது. இந்த சம்பவம் டெல்லி மக்களின் இதயத்தை நொறுங்க செய்துவிட்டது.

மக்களிடையே நாளுக்கு நாள் செல்ஃபி மோகம் அதிகரித்துவரும் நிலையில் பல்வேறு முக்கிய இடங்களுக்கு செல்லும் மக்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்து கொள்ள தவறுவதில்லை. எடுத்து கொள்ளும் செல்ஃபிக்களை சோஷியல் மீடியாக்களில் அப்லோட் செய்து லைக்ஸ் களை அள்ளவும் தவறுவதில்லை.

இந்நிலையில் நாட்டின் தலைநகரான டெல்லியின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் கரோல் பாக் (Karol Bagh) அருகே உள்ள செல்ஃபி பாயின்ட்டில்‘ஐ லவ் டெல்லி’ என்ற பலகை நிறுவப்பட்டிருந்தது. சமீபத்தில் ‘I love Delhi' பலகையில் இருந்த இதய வடிவிலான அடையாளம் திருடப்பட்டது. இந்த சம்பவம் டெல்லி மக்களின் இதயத்தை நொறுங்க செய்துவிட்டது. ஆயிரக்கணக்கானோர் ஆசை ஆசையாய் செல்ஃபி எடுத்து கொள்ளும் I love Delhi-ன் I-க்கும், Delhi-க்கும் நடுவில் இருந்த ஹார்ட்டின் திருடப்பட்டது பலரையும் வருத்தமடைய செய்தது.

ஒரு இள வயது நபர் டெல்லி மக்களின் வருத்தத்திற்கு ஒரு தற்காலிக தீர்வைக் கொண்டு வர விஷயத்தை தன் கையில் எடுத்து கொண்டார். திருடப்பட்ட ஹார்ட்டிற்கு பதில் அதே இடத்தில் வேறொன்றை நிறுவ முடிவு செய்தார். I love Delhi-ல் காணாமல் போன இதயத்திற்கு பதிலாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதை யோசித்து கொண்டே இருந்த houseofkhatri என்ற அந்த இன்ஸ்டா யூஸர், இப்போது அதே இடத்தில் ஒரு தற்காலிக இதயத்தை ஒரு செய்தியுடன் நிறுவியுள்ளார். ஆனால் இவர் நிறுவியுள்ள இதயம் காகிதத்தால் ஆனது.



 




View this post on Instagram





 

A post shared by Karshin Khatri (@houseofkhatri)






 

இவர் அந்த இடத்தில் பேப்பரால் நிறுவியுள்ள இதயத்தில் உள்ள செய்தி இது தான் " இதயம் ஒரு இதயம் தான், அது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டிருந்தாலும் சரி அல்லது காகிதத்தால் செய்யப்பட்டாலும் சரி". தனது காகித இதயத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள அந்த யூஸரின் செயலுக்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. தற்காலிக பேப்பர் இதயத்துடன் கூடிய I love Delhi போஸ்ட் சோஷியல் மீடியாக்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

ReadMore : காதலியை இருட்டில் சந்திக்க இளைஞர் செய்த செயலால் ஒட்டுமொத்த கிராமமே அதிர்ச்சி


திருடப்பட்ட இதயத்திற்கு பதிலாக அந்த இடத்தில காகிதத்தில் இதயத்தை மாற்றியமைத்ததற்காக பலர் குறிப்பிட்ட இளைஞரைப் பாராட்டினாலும், இந்த தற்காலிக இதயத்தின் பாதுகாப்பைப் பற்றி சிலர் கவலை தெரிவித்தும் கமெண்ட்ஸ் செய்தனர். பேப்பரில் நீங்கள் செய்து வைத்துள்ள இந்த இதயத்தையும் யாராவது திருடிவிட போகிறார்கள் என்று ஒரு யூஸர் குறிப்பிட்டு உள்ளார். மற்றொரு யூஸர் டெல்லி உங்களை நேசிக்கிறது என்று குறிப்பிட்டார். திருடப்பட்ட சிவப்பு நிற ஹார்ட்டின் சின்னத்தை பேப்பரால் மாற்றிய டெல்லி இளைஞனின் பெயர் கர்ஷின் காத்ரி ஆகும்.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Delhi, Trending, Viral

அடுத்த செய்தி