காதலியின் திருமணத்தைத் தடுக்க இருவரும் சேர்ந்து இருந்த படத்தை போஸ்டராக ஒட்டிய இளைஞர் கைது..!

காதலியின் திருமணத்தைத் தடுக்க இருவரும் சேர்ந்து இருந்த படத்தை போஸ்டராக ஒட்டிய இளைஞர் கைது..!
  • Share this:
காதலியின் திருமணத்தைத் தடுப்பதற்காக போஸ்டர் ஒட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் சலான் என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. திருமணம் நிச்சயமான பெண்ணும் அந்த இளைஞரும் சேர்ந்து இருந்து ஹோலிக்கு வாழ்த்துகள் தெரிவிப்பது போல் போஸ்டரகள் ஒட்டப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் அந்த பெண்ணுக்கும் வழக்கறிஞர் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


புகாரின் அடிப்படையில் போலீசார் போஸ்டர் ஒட்டிய இளைஞரை கைது செய்துள்ளனர். அந்த பெண்ணின் திருமணத்தைப் பற்றி தெரிந்து கொண்டு அவரை பழிவாங்கும் விதமாக சுவரொட்டிகளை சரோஜ் குமார் என்ற இளைஞர் ஒட்டியதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர். மேலும் அந்த சுவரொட்டிகள் நீக்கப்பட்டு அவரிடம் முறையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறி உள்ளனர்.
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading