Home /News /trend /

மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டவரின் உறுப்புகளை எடுக்குமுன் உடலசைந்த நிகழ்வு!

மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டவரின் உறுப்புகளை எடுக்குமுன் உடலசைந்த நிகழ்வு!

மூளைச்சாவு

மூளைச்சாவு

CT ஸ்கேன் முடிவில் மூளை செயல்பாடுவது போன்ற அறிகுறிகளைக் காட்டியது. மூளைச்சாவு அடையவில்லை என்பது உறுதியானது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |
மருத்துவர்களால் 'மூளைச்சாவு அடைந்துவிட்டதாக' அறிவிக்கப்பட்ட ஒரு பாதிரியார் தனது  உறுப்புகளை தானமாக எடுப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உடலை அசைக்கத் தொடங்கியுள்ளார்.

வட கரோலினாவைச் சேர்ந்த 37 வயது பாதிரியார் ரியான் மார்லோ என்ற நபர், லிஸ்டீரியா என்ற அரிய பாக்டீரியா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.

இரண்டு வார சிகிச்சையில், பாக்டீரியா தொற்று மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தியதால், 'மூளைச்சாவு' ஏற்பட்டதாக அவரது மனைவி மேகனிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேகன் தனது கணவரின் உடல்நிலை குறித்த செய்தியை பேஸ்புக்கில் நேரலையில் பகிர்ந்துள்ளார்.

ரியான் தனது உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்திருந்ததால், அவரது உறுப்புகளுக்கு சாத்தியமான பொருத்தங்களை கண்டறியும் வரை மருத்துவர்கள் அவரது உடலை ஆக்சிஜன் சப்போர்டுடன் வைத்திருந்தனர்.

பயணிகள் கவனத்திற்கு.. வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்க்கவேண்டிய இந்தியாவில் உள்ள தீவுகள் !

ஆகஸ்ட் 30 அன்று, ரியானின் குடும்பத்தினர் அவரது உறுப்புகளை எடுக்கும் முன்னர் இறுதியாக காண்பதற்காக வந்துள்ளனர். அப்போது உறவினர் ஒருவர் அவரது உடல் அசைவதைக் கண்டு அதிர்ந்துள்ளார். ரியானின் குழந்தைகள் எடுத்த வீடியோவிலும் அவரது கால் துடிப்பதையும் அசைவதையும் கண்டுள்ளனர்.

இதனால் மேகன் தனது கணவரின் மூளையின் செயல்பாட்டை மீண்டும் ஒருமுறை பரிசோதிக்க மருத்துவக் குழுவிடம் கேட்டுக் கொண்டார். அதன் பின் செய்த CT ஸ்கேன் முடிவில் மூளை செயல்பாடுவது போன்ற அறிகுறிகளைக் காட்டியது. மூளைச்சாவு அடையவில்லை என்பது உறுதியானது

அதன் பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை வேறு மருத்துவமனைக்கு மற்ற மேகன் முயற்சித்துள்ளார். தனது கணவர் மீண்டும் உணர்ச்சி பெற்றது இறைவன் அருளால் தான் என்று மேகன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Brain death, Organ donation

அடுத்த செய்தி