ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பண்டிகை கால ஆஃபர் நேரத்தில் இப்படியா.? நொந்து போன நபர் பகிர்ந்த வைரல் வீடியோ.!

பண்டிகை கால ஆஃபர் நேரத்தில் இப்படியா.? நொந்து போன நபர் பகிர்ந்த வைரல் வீடியோ.!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Viral Video | பண்டிகை கால சிறப்பு தள்ளுபடியில் ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியாமல் நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ள வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை காலம் வருவதால், ஏராளமான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையாளர்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளனர். ஒருபக்கம் இந்தியர்களின் முதன்மையான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ‘பிக் பில்லியன்ஸ் டே சேல்’ என்ற பெயரில் கடந்த 23ம் தேதி முதல் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகிறது.

சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூட வினாடிக்கு 1.6 மில்லியன் பயனர்கள் ஒரே நேரத்தில் தளத்தை பார்வையிட்டுள்ளதாகவும், புடவைகள், ஆண்களுக்கான டி-ஷர்ட்கள், ஹெட்ஃபோன்கள் ஆகியவற்றை மக்கள் அதிக அளவில் வாங்கிக் குவித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.

மற்றொருபுறம் அமேசான் “கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2022” என்ற பெயரில் பண்டிகை கால சிறப்பு விற்பனையைத் தொடங்கி பட்டையைக் கிளப்பி வருகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு ஃபேஷன் மற்றும் ஆடை விற்பனை ஆன்லைன் தளங்களும் போட்டி, போட்டுக்கொண்டு ஆஃபர்களை அறிவித்துள்ளன. இதனிடையே மக்களும் மாதக் கடைசி என்று கூட பார்க்காமல் கையில் இருக்கும் சேவிங்ஸ் கரைய, கரைய பொருட்களை வாங்கிக் குவித்து வருகின்றனர்.

Also Read : Flipkart-ன் பிக் பில்லியன் டே விற்பனையில் தந்தைக்காக லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - யார் மீது தவறு.?

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் ‘அள்ளிக்கோ... ஆசைப்பட்டத அள்ளிக்கோ’ என பொழியும் ஆஃபர் மழையில் ஆசைப்பட்டதை வாங்க முடியாமல் தவித்து வருவதை அழகான ஒரு வீடியோ மூலமாக ட்விட்டரில் வெளியிட, தற்போது அது தாறுமாறாக வைரலாகி வருகிறது. வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லாததால் அவருக்கு பிடித்த உடையை வாங்க முடியவில்லை என்பதை சோகமாக அமர்ந்திருக்கும் குரங்கு வீடியோ மூலமாக பகிர்ந்துள்ளார்.

“காட்மேன் சிக்னா” என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “விற்பனை நாட்களில் நான்... ரூ. 762/- என் கணக்கில் உள்ளது” என டேக் லைன் கொடுத்து, அத்துடன் சோகமாக உட்கார்ந்திருக்கும் ஒரு குரங்கு தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் குரங்கு வலது, இடது பக்கமாக திருப்பி பார்த்துவிட்டு மீண்டும் ஏமாற்றத்துடன் தலையை தொங்கப்போட்டுக் கொள்கிறது. இது பார்க்க ‘எனக்கில்ல, எனக்கில்ல... அந்த ஆபஃரை வாங்குற அதிர்ஷ்டம் எனக்கில்ல’ என மனக்குமுறலைக் கொட்டுவது தெரிகிறது.

Also Read : இந்தியாவில் ஆவிகள் நடமாட்டம் நிறைந்த ஐந்து சாலைகள்! சென்னையிலும் இருக்காம்..

12 வினாடிகளை மட்டுமே கொண்ட அந்த வீடியோவை இதுவரை 6.75 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். 17,000 லைக்கும், ஆயிரக்கணக்கானோர் விதவிதமாக கமெண்டும் செய்துள்ளனர். பண்டிகை காலங்கள் என்றில்லை பல்வேறு சமயங்களில் இ-காமர்ஸ் தளங்களில் மாதக்கடைசி நாள்களில் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகை விலை விற்பனையை அறிவிப்பதால் பெரும்பாலான நடுத்தர குடும்ப நபர்களின் நிலை இப்படித் தான் உள்ளதாக கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

Published by:Selvi M
First published:

Tags: Online Sale, Online shopping, Trending, Viral Video