நீ என்ன பெரிய புலியா..? கிராமத்திற்கே தண்ணி காட்டிய புலி...!

நீ என்ன பெரிய புலியா..? கிராமத்திற்கே தண்ணி காட்டிய புலி...!
புலி
  • Share this:
நீ என்ன பெரிய புலியா..? என்ற படி கிராம மக்கள் ஒன்றிணைந்து புலி ஒன்றினை விரட்ட தன்னை காத்துக்கொள்ள கிராமத்திற்கே தண்ணி காட்டிய புலி தான் இன்றைய ட்ரெண்டிங்.

வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் கிராமத்தில் புலி ஒன்று வருகை தந்துள்ளது. இதனால் அச்சம் அடைந்த கிராம மக்கள் கம்புகளையும் , கட்டைகளையும் எடுத்துக்கொண்டு புலியை ஓட ஓட விரட்டுகின்றனர். சுத்தி பாக்க வந்தது ஒரு குற்றமாடா? என்றபடி புலியும் கிராம மக்களுக்கு பயந்தவாறு ஓடியது.

பின்னர் ஒரு கட்டத்தில் மூச்சு வாங்கிய புலியோ இது சரி பட்டு வராது.. என யூகித்து விட்டதோ என்னவோ துரத்தி வந்த நபர்களில் ஒரு நபரை பிடித்து சாப்பிடுவது போல் மக்களுக்கு டெமோ ஒன்று காட்டியது.


இதனால் அச்சம் அடைந்த கிராம மக்கள் புலியை துரத்துவதை நிறுத்தி, சிக்கிய நபரை காப்பாற்ற எண்ணினர். சிலர் அச்சத்தில் பயந்து ஓடவும் செய்தனர். பின்னர் கிராம மக்களுக்கே தண்ணி காட்டிய படி புலி கூலாக அங்கிருந்து தான் பிடித்த நபரை ஒன்றும் செய்யாமல் ஒதுங்கியது.

நீ என்ன பெரிய புலியா..? என விரட்டிய கிராம மக்களுக்கு தனது செய்கையால் உணர்த்தியது போல் இருந்தது இந்த வீடியோ.  இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் WOW! GREAT TIGER! LUCKY MAN!😱😱😱😱 என வியந்த படி ஷேர் செய்து வருகின்றனர்.


Also see...கால்கள் இல்லை... உடலை கொடியாக்கி, கைகளை கம்பமாக்கிய இளைஞர் !

என்ன ஒரு புத்திசாலித்தனம்...! காப்பி பேஸ்ட் செய்த பசுக்கள்

 
First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading