பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ரயில் நிலையங்களின் சைன்போர்டுகளில் கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அங்கு புதிதாக தொடங்கப்பட்ட நம்ம மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளில் இடம்பெற்றிருந்த இந்தி மொழி அழிக்கப்பட்டது. கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போதே இந்த பிரச்சினை நிலவி வந்த நிலையில், தற்போதும் மாநில மொழிக்கும், இந்தி மொழிக்கும் இடையே அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.
அதே போல பெங்களூரு மெட்ரோவில், இந்தி அறிவுறுத்தல்கள் அடங்கிய சைன்போர்டு, ஸ்டிக்கர் டேப்பைக் கொண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழியில் மட்டுமே சைன் போர்டுகள் இருந்தன. இந்த நிலையில் நபர் ஒருவர் அந்த டேப்பை அகற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Read More : வைரலாகும் மணப்பெண்ணின் சிகை மற்றும் நகை அலங்காரம்..! அப்படி என்ன ஸ்பெஷல்!
கனன் ஷா என்ற ட்விட்டர் பயனரால், தென் இந்தியாவில் ஹிந்திக்கு எதிராக ஏன் இத்தனை வெறுப்பு எனக் கூறி பகிரப்பட்ட அந்த வீடியோவில், கதவுகள் திறந்தவுடன் இறங்கவும், இடைவெளியை கவனியுங்கள் போன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள், கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு மெட்ரோ ரயிலில் ஒட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் அந்த ஸ்டிக்கர்களை உற்று நோக்கும் நபர் ஒருவர், மூன்றாவது மொழியாக இருந்த இந்தியை காணவில்லையே என பார்க்கிறார். பின்னர் மறைத்து ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்றி ஹிந்தி வார்த்தைகள் பயணிகளுக்கு தெரியும் படி கிழித்து எடுக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து கன்னட மொழி ஆர்வலர்கள் பலர் டிவிட்டர் வீடியோவிற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தது மட்டுமல்லாமல், அந்த நபரை வலைவீசி தேடிவந்தனர். பின்னர் அக்ஷத் குப்தா என அடையாளம் காணப்பட்ட அந்த நபரின் அலுவலகத்திற்கு சென்ற கன்னட மொழி ஆர்வலர்கள், இது குறித்து அக்ஷத் குப்தாவிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அதன் பிறகு குப்தாவின் புதிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளிவந்தது, அதில் அவர், இந்தி மொழி தெரியும் படி ஸ்டிக்கர்களை அகறியதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
Why so much Hate for Hindi in South India?? 😢 pic.twitter.com/I7yIhOC5ts
— Kanan Shah (@KananShah_) January 30, 2023
புதிய வீடியோவில், குப்தா, “அனைத்து கன்னடர்களுக்கும் வணக்கம், நான் தவறுதலாக ஸ்டிக்கர்களை அகற்றிவிட்டேன், அதனால் நான் வருத்தப்படுகிறேன், பிராந்திய மொழியில் திணிக்கப்பட்ட இந்திக்கு நானும் எதிரானவன், எனவே "தயவுசெய்து எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்," என்று அவர் கூறுகிறார். இந்த ட்விட்டர் வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், இந்தி திணிப்பை ஒருபோதும் கன்னடர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று மொழி ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் தேசிய மொழிக்கு ஆதரவாகவும் தங்கள் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.