ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்.. கணவரின் செயலுக்கு குவியும் பாராட்டு - வைரல் வீடியோ

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்.. கணவரின் செயலுக்கு குவியும் பாராட்டு - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | இன்றைய சூழலில் என்றென்றும் அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதியர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நீங்கள் நீண்ட காலமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருபவர் என்றால் இந்த நிகழ்வு உங்களுக்கு கட்டாயம் நினைவில் இருக்கும். அதாவது, வயதான தம்பதியர் ஒருவர் டீ கடையில் ஆளுக்கொரு டீயும், பன்னும் வாங்கி, அதை ‘நீ சாப்பிடு’ என்று ஒருவருக்கு, ஒருவர் பரிமாறிய வீடியோ காட்சிகளை வெகு காலத்திற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள்.

  இந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல. கணவன், மனைவி எதார்த்தமாக அன்பை பரிமாறிக் கொண்ட ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோல எந்தவொரு வீடியோ வெளிவந்தாலும் அவை உடனடியாக டிரெண்டிங் ஆகி விடுகின்றன.

  காரணம் என்னவென்றால், இன்றைய சூழலில் என்றென்றும் அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதியர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. திருமணமான சில ஆண்டுகளில் எலியும், பூனையுமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர். அவ்வளவு ஏன், நம் வாழ்க்கையிலுமே கூட, நாம் ஆசைப்பட்டாலும் கூட சண்டை, சச்சரவுகள் இன்றி இருக்க முடிவதில்லை.

  அப்படியொரு சூழலில், தள்ளாத வயதிலும் அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதியரை கண்டால் நம் மனம் ஏக்கம் அடைய தொடங்குகிறது.

  இணையத்தில் தற்போது டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கும் வீடியோவும் கூட இந்த ரகத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது. இந்த வீடியோவில் வரும் தம்பதியர் நடுத்தர வயதைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். கர்நாடகாவில் உள்ள பேருந்து நிலையில் ஒன்றில், எதார்த்தமாக இந்த வீடியோ படம்பிடிக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

  பேருந்துக்காக தம்பதியர் காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், மனைவி சோர்வடைந்த நிலையில், அவர் தன் கணவனின் மடி மீது படுத்துறங்க தொடங்கிவிட்டார். அப்போது மனைவி சௌகரியமாகவும், சுகமாகவும் தூங்கும் வகையில், அவரது கையை பற்றிக் கொண்ட கணவர், மற்றொரு கையால் தலையை தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

  உங்கள் வாழ்க்கை பயணத்தில் கூடவே வருகின்ற மிக அற்புதமாக துணைவர் என்ற தலைப்பில் டிவிட்டர் பயனாளர் ஒருவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தான் இப்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. வீடியோ வெளியாகி 6, 7 நாட்கள் கடந்துள்ள நிலையில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் இதை பார்வையிட்டுள்ளனர்.

  எண்ணற்ற நபர்கள் இந்த வீடியோவை ரீட்வீட் செய்கின்றனர். ஏராளமானோர் ஹார்டின் விட்டு, தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பலரும் இதுபோன்ற வாழ்க்கை அமைய வேண்டும் என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துவதுடன், இது நிபந்தனையற்ற காதல் என்று பாராட்டியுள்ளனர்.

  தினம், தினம் கணவன், மனைவி சண்டை, பிரிவு என்று நம் மனதினுள் எதிர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தும் செய்திகள் கொட்டிக் கிடக்கும் இன்றைய உலகில் இதுபோன்ற செய்திகள் தான் வாழ்க்கை இன்பமாகும் என்ற நம்பிக்கையை தருகிறது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral