ஒருவர் சுவரை வெறும் 30 வினாடிகளில் பெயிண்ட் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஏறக்குறைய ஒரு வருடம் ஆன்லைன் வகுப்புகள், வீட்டிலிருந்தே வேலை என வீட்டில் இருந்து அனைத்து பணிகளையும் செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வீட்டில் தங்கியிருப்பது பலரை சுற்றியுள்ள சூழலை மேம்படுத்தத் தூண்டியுள்ளது. ஆன்லைன் சந்திப்புகளின் ஒரு பகுதியாக அதிக நேரத்தை செலவிடுவோருக்கு, அவர்கள் தங்கள் நண்பர்கள் பார்க்கும் இடங்களை அழகாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.
இதற்கான வேலையைச் செய்ய ஒருவரை நியமிப்பது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். இதனால் ஏராளமானோர் தாங்களே தங்களது வீடுகளை அழகாகும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் ஒரு மனிதன் தனது DIY ஓவியத் திறமையால் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அப்படி அவர் என்ன செய்து விட்டார் என தோன்றுகிறதா? அவர் ஒரு முழு சுவரை 30 வினாடிகளில் வரைந்து முடித்து விடுகிறார். அவரது அழகிய கைவேலைப்பாடுகள் அடங்கிய வீடியோ TikTokல் @angela_j_official என்ற பயனரால் பகிரப்பட்டது. அதற்கு "பூமியில் இது எப்படி சாத்தியமாகும்?" என்று தலைப்பிட்டுள்ளார்.
Also read... வாகா to அருணாச்சல்... 2 பெண்களின் 5,000 கி.மீ சைக்கிள் பயணம்! எதற்காக தெரியுமா?
அந்த வீடியோவில், ஒரு மஞ்சள் நிற சுவர் உள்ளது. அங்கு ஒருவர் வெள்ளை நிற பெயிண்ட் ரோலருடன் வருகை தந்து ஜிக்-ஜாக் ஸ்ட்ரோக் செய்கிறார். பின்னர் மீதமுள்ள மஞ்சள் வண்ணப்பூச்சை , வெள்ளை நிறத்தில் மறைக்க விரைவாக வேலை செய்கிறார். அதாவது, நீங்கள் மேகி சமைக்கப்படுவதற்கு முன்பே அந்த நபர் முழு சுவரையும் புதிய வெள்ளை நிற பெயிண்டால் அழகு படுத்திவிடுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் தற்போது வைரலாகி வருகிறது. வெறும் 30 வினாடிகளில் அவர் சுவற்றிற்கு வண்ணம் தீட்டியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது திறமையை கண்டு வியந்த நெட்டிசன்கள் அவரை வேலைக்கு அமர்த்த விரும்பினர். ஒரு யூசர், "நீங்கள் வந்து எனது வீட்டிற்கு பெயிண்ட் அடித்து தருகிறீர்களா? என கேட்டுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.