பொம்மை கார் ஆர்டரில் வந்த ParleG பிஸ்கட்-அமேசான் ஆர்டரில் குழப்பம்!

அமேசான் தளத்தில் பொம்மை கார் ஆர்டர் செய்த டெல்லியைச் சேர்ந்தவருக்கு பார்லே ஜி பிஸ்கட் வந்ததால், ஆர்டர் கொடுத்தவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அமேசான் தளத்தில் பொம்மை கார் ஆர்டர் செய்த டெல்லியைச் சேர்ந்தவருக்கு பார்லே ஜி பிஸ்கட் வந்ததால், ஆர்டர் கொடுத்தவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

  • Share this:
அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் ஆர்டர் செய்த பொருளுக்கு மாற்றாக சில விநோதமான பொருட்கள் வருவதை பல சமயங்களில் பார்த்திருக்கிறோம். இதேபோல், தற்போது டெல்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த விக்ரம் பார்கோஹெய்ன் என்பவர் அமேசான் தளத்தில் பொம்மை கார் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வந்த பார்சலில் பார்லேஜி பிஸ்கட் இருந்துள்ளது.

தான் ஆர்டர் கொடுத்ததையும், தனக்கு பார்சல் வந்ததையும் புகைப்படங்களாக எடுத்து முகநூலில் பதிவிட்டுள்ள விக்ரம், தனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவத்தை நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். அவர் எழுதியுள்ள அந்த பதிவில்," நான் அமேசான் தளத்தில் பொம்மை கார் ஒன்றை ஆர்டர் செய்திருந்தேன். அதற்கான மெசேஜ் எனக்கு வந்திருந்தது. குறிப்பிட்ட நாளில் எங்கள் வீட்டுக்கு பார்சலும் வந்தடைந்தது. மகிழ்ச்சியாக பார்சலை ஓபன் செய்து பார்த்தபோது ஏமாற்றமே எனக்கு மிஞ்சியது. ஏனென்றால், நான் பொம்மை கார் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் பார்சலில் பார்லே ஜி பிஸ்கட் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நகைச்சுவையாக அமேசான் நிறுவனம் தனக்கு கூடுதல் வேலையை வைத்துள்ளதாக தெரிவித்த அவர், பார்சலில் வந்த பிஸ்கட்டுக்காக டீ போட வேண்டியதாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு இணையத்தில் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் அவருடைய கூலான பதிவுக்கு நகைச்சுவையாக ரிப்ளே பதிவு செய்தனர். நெட்டிசன் சிலர் எழுப்பிய கேள்விகளுக்கும் விக்ரம் பதில் அளித்துள்ளார்.

Also Read :வித்தியாச முறையில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்!

அதில் ஒரு நெட்டிசன், பார்சலில் வந்த பிஸ்கட், உங்களுடைய மாலை நேர சிற்றுண்டி பற்றாக்குறையை தீர்த்து வைத்துவிட்டது எனக் கூறியுள்ளார். மற்றொருவர் தவறான பொருட்கள் பார்சலில் வந்தது குறித்து புகார் எழுப்பிவிட்டீர்களா? என வினவியிருந்தார். அதற்கு பதில் அளித்த விக்ரம், ஏற்கனவே நிறுவனத்துக்கு புகார் அனுப்பிவிட்டதாகவும் பணம் திரும்பவும் செலுத்தும் நடைமுறை தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார். தவறான பொருட்கள் வந்ததற்காக அமேசான் நிறுவனம் வருத்தம் தெரிவித்துவிட்டதாகவும் விக்ரம் தெரிவித்தார். இதேபோல், கடந்த மாதம் மகாராஷ்டிராவில் ஒரு விநோத சம்பவம் நடந்தது.

Also Read : நடிகர் விஜய் பற்றி யாருக்கும் தெரியாத 50 சுவாரஸ்ய தகவல்கள்..

மும்பையைச் சேர்ந்த ஒருவர் கோல்கேட் மவுத் வாஷ் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். கொரோனா காலத்தில் மும்பையில் ஊரங்கு விதிமுறைகள் அமலில் இருந்ததால் வெளியில் கடைகள் எதுவும் இல்லை. இதனால், அங்கு பலரும் ஆன்லைன் வழியாக பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். குறிப்பிட்ட நாளில் அவருக்கு ஆர்டர் வந்தது. பார்சலை திறந்து பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அவர் ஆர்டர் செய்திருந்த கோல்கேட் மவுத் வாஷூக்கு பதிலாக 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரெட்மீ நோட் 10 புதிய ஸ்மார்ட்போன் இருந்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: