Zomato-ல் உணவு ஆர்டர் செய்துவிட்டு, டெலிவரிபாய் உடன் வீட்டிற்கு சென்ற நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு

நான் தான் ஆர்டர் செய்தேன். நீங்கள் செல்லவிருக்கும் இடம் என் வீடு தான். என்னையும் உடன் அழைத்துச் சென்று இறக்கிவிடுங்கள்.

Zomato-ல் உணவு ஆர்டர் செய்துவிட்டு, டெலிவரிபாய் உடன் வீட்டிற்கு சென்ற நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு
ஸொமாடோ
  • News18
  • Last Updated: August 16, 2019, 8:53 PM IST
  • Share this:
நள்ளிரவில் பேருந்து நிலையத்தில் நிற்கிறீர்கள். கையில் காசு குறைவாக உள்ளது.. ஆனால் வீட்டிற்கும் செல்ல வேண்டும்.. எப்படி செல்வீர்கள்..?

தெரியாது எனில் இந்த வியக்க வைக்கும் யோசனை உங்களுக்கும் உதவலாம்.

அதாவது ட்விட்டரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை முடித்துவிட்டு வீடு திரும்ப உபர் டாக்ஸியில் பதிவு செய்ய முயற்சித்தபோது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு 300 ரூபாய் என காட்டியுள்ளது. மிகவும் அதிகமான தொகையாக இருக்கிறதே என யோசித்த இளைஞருக்கு அற்புதமான யோசனைக் கிட்டியுள்ளது.




அருகில் எந்த ஹோட்டல் இருக்கிறது என்று பார்த்ததில் தோசை பந்தி என்ற கடை இருந்துள்ளது. ஸொமடோவில் அந்த கடையில் ஒரு தோசை ஆர்டர் செய்துள்ளார்.

பின் அந்த ஹோட்டலுக்கு வெளியே காத்திருக்க ஆர்டரை எடுக்க ஸொமேட்டோ ஊழியர் வந்திருக்கிறார். பின் அவரிடம் நான் தான் ஆர்டர் செய்தேன். நீங்கள் செல்லவிருக்கும் இடம் என் வீடு தான். என்னையும் உடன் அழைத்துச் சென்று இறக்கிவிடுங்கள் என ஆர்டரை எடுத்துக்கொண்டு ஸொமடோ ஊழியருடன் இலவசமாக பயணித்து வீட்டிற்குச் சென்று இறங்கியுள்ளார்.

இறுதியாக அந்த ஊழியரும் ஸ்டார் ரேட்டிங் போடுங்கள் என சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.




இவரை தற்போது சமூகவலைதளங்களில் ’லெஜண்ட்’ என பாராட்டி வருகின்றனர்.

Watch Also:
First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்