நாய் புகைப்படம் அல்ல... உற்றுப்பார்த்தால் தான் தெரியும் இந்த போட்டோவின் உண்மைத்தன்மை

இது மனிதனா அல்லது நாயா? கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

பனி படர்ந்த காடுகளுக்குள் நடந்து செல்லும் ஒரு உருவம் நாயா அல்லது மனிதனா என்பதை புரிந்து கொள்வதில் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
சமீபத்தில் வெளியான ஒரு ஆப்டிகல் மாயை புகைப்படம் ஒன்று நெட்டிசன்களை குழப்பத்தில் விட்டுச் சென்றுள்ளது. பனி படர்ந்த காடுகளுக்குள் நடந்து செல்லும் ஒரு உருவம் நாயா அல்லது மனிதனா என்பதை புரிந்து கொள்வதில் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒரு உருவம் பார்ப்பதற்கு பூடில் இனத்தை சேர்ந்த நாய் ஒன்று வனப்பகுதியில் இருந்து ஓடி வருவது போல இருக்கிறது. ஆனால் சிலருக்கு அது ஒரு மனித உருவம் அடர்த்தியான காடுகளுக்குள் நுழைவது போலவே தெரிந்ததாக கூறியுள்ளனர். இணையத்தில் வைரலாகியுள்ள இந்த புகைப்படம் மக்களை 'திசைதிருப்ப' மற்றும் 'குழப்பமடையச் செய்துள்ளது'.

புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் குறித்து எதுவும் தெரியவில்லை. இருப்பினும் இந்த படம் உலகெங்கிலும் உள்ள பேஸ்புக் யூசர்களால் பரவலாக பகிரப்பட்டது. அதில் ஒரு சிறிய உருவம் ஒரு பையை தோளில் சுமந்து கொண்டு காடுகளுக்குள் செல்வதைக் காண்பிப்பதாக பலர் நம்பினர்.ட்விட்டர் யூசர் கிளார்க் டேவிட்சன் என்பவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், இந்த பதிவு சுமார் 1.07 மில்லியனுக்கு மேற்பட்ட லைக்குகளையும் 13,400 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. மேலும் பல கருத்துக்களை பதிவிட்டுட்டு வருகின்றனர்.இருப்பினும், இணையத்தில் நீங்கள் காணும் அனைத்து ஆப்டிகல் மாயைகளும் அவ்வளவு சிந்தனையைத் தூண்டும் மற்றும் விஞ்ஞானம் மிக்கவையாக இருக்காது. ஏனென்றால் ஆப்டிகல் மாயைகள் மற்றும் பெரிதாக்கப்பட்ட ரியாலிட்டி படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த நாட்களில் யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் சில நேரங்களில், ஒரு தனித்துவமான கோணத்திலிருந்து எடுக்கப்பட்ட சரியான புகைப்படம் விஷயங்களை மிகவும் சுவாரஸ்யமாக்கும்.

அந்த வகையில் இந்த புகைப்படம் புரிந்து கொள்ளவோ மறக்கவோ முடியாத விஷயங்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. இந்த படத்தின் ஒளியியல் மாயை என்னவென்றால் பனியால் மூடப்பட்ட வனப்பகுதி தான். அதுவே பார்வையாளர்களை குழப்பமடையச் செய்யும் ஒரு விஷயத்தைக் கொண்டுள்ளது. நெட்டிசன்களுக்கு ஒரு ஆப்டிகல் மாயயை உருவாக்கி உள்ளது.

மேலும் படிக்க... கொரோனா 2வது அலை ஏன் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது..? பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?

இதனாலேயே பனியால் மூடப்பட்ட காடுகளின் வழியாக ஒரு மனிதன் ஒரு பையுடனும் ஓடுவதை போல இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், பலர் இந்த படத்தை முதலில் பார்த்தவுடனேயே பூடில் நாய் ஓடி வருவதை காண முடிகிறது என்று தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர். அதில் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாவது, "நான் காடுகளுக்குள் ஓடும் மனிதன் எங்கே என்று கண்டுபிடிக்க சுமார் 15 நிமிடங்கள் செலவிட்டேன். ஒருவேளை அவர் பெரிய நாய்க்கு பின்னால் இருக்கலாம் என்று நினைத்தேன்." என்று தெரிவித்துள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: