மனைவிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் முன் முதியவர் 37-வது திருமணம் - வைரலாகும் வீடியோ!

முதியவர் 37-வது திருமணம்

ஒரு முதியவர் 37-வது முறையாக திருமணம் செய்து கொண்டு அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

  • Share this:
இன்டர்நெட் எப்போதுமே பல வினோதமான கதைகளால் நிரம்பியுள்ளது. தவிர சோஷியல் மீடியாக்களில் வைரலாகும் வீடியோக்கள் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது. அப்படி சமீபத்தில் மக்கள் மத்தியில் வைரலாகி வரும் வீடியோக்களில் ஒன்று தான் ஒரு முதியவரின் திருமண நிகழ்வு. இதில் வைரலாக என்ன இருக்கிறது என்கிறீர்களா.? அவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ 37-வது முறையாக திருமணம் செய்து கொள்வதாக அந்த வீடியோவில் கூறப்படுவது தான் இந்த வீடியோ வைரலாக காரணம்.

கல்யாணம் பண்ணி பார், வீட்டை கட்டிப்பார் இது நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட பழமொழி. இதில் முதல் வரியான கல்யாணம் பண்ணி பார் என்பது திருமணம் செய்து வைப்போருக்கு மட்டுமல்ல, திருமணம் செய்து கொள்ளும் தம்பதியருக்கும் பொருந்தும். ஏனென்றால் இருவேறு சூழல் மற்றும் மனநிலையில் உள்ள இருவர் திருமண வாழ்வில் இணையும் போது சலசலப்பிற்கு பஞ்சமிருக்காது. அவரவர் ஒரு கல்யாணம் செய்து கொண்டே வாழ்க்கை சலிப்படைந்து விட்டது போன்று நினைத்து கடந்து செல்லும் சூழலில், இங்கே ஒரு முதியவர் 37-வது முறையாக திருமணம் செய்து கொண்டு அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை விட பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இந்த திருமணத்திற்கு அந்த முதியவரின் 28 மனைவிகள், 35 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகள் விருந்தினர்களாக வந்து வாழ்த்தியது தான். முதியவர் மற்றும் அவர் பக்கத்தில் அமர வைக்கப்பட்டிருக்கும் பெண்ணை சுற்றிலும் சிறு குழந்தைகள் (பேர குழந்தைகள்) மற்றும் உறவினர்கள் தொடர்ந்து கைகளை தட்டி உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்கின்றனர்.இந்த வினோதமான வைரல் கிளிப்பை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா என்பவர் தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். இந்த வைரல் வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா "துணிச்சலான மனிதன்" என்ற கேப்ஷன் கொடுத்து ஷேர் செய்து உள்ளார். மேலும் இந்த திருமணம் 28 மனைவிகள், 135 குழந்தைகள் மற்றும் 126 பேர குழந்தைகளுக்கு முன்னால் நடந்த முதியவரின் 37-வது திருமணம் என்ற தகவலை குறிப்பிட்டுள்ளார் ரூபின் சர்மா. இருப்பினும் இந்த வீடியோ எப்போது, எந்த நாட்டில் எந்த இடத்தில் ஷூட் செய்யப்பட்டது என்ற தகல்கள் தெளிவாக தெரியவில்லை. எனினும் ஐபிஎஸ் அதிகாரி ஷேர் செய்துள்ள கிளிப் என்பதால் இதில் உண்மை தன்மை இருக்கும் என்று நம்பி ஏராளமான நெட்டிசன்கள் இந்த வீடீயோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Also read... விடுமுறைக்காக சூப்பர் மார்க்கெட் ஊழியரின் சூப்பர் பிளான் - வைரலாகும் வீடியோ!

அதிகாரி ஷர்மா பகிர்ந்த இந்த கிளிப் ட்விட்டரில் ஆயிரக்கணக்கான வியூஸ்களை பெற்று வருகிறது மற்றும் பல நெட்டிசன்களை மகிழ்வித்தது. இதனிடையே சில யூஸர்கள் முதியவரின் திருமண செயல் குறித்து கடுமையாக சாடி உள்ளனர். இந்த 21-ஆம் நூற்றாண்டில் கூட மன்னர்கள் காலத்தை போல இவ்வளவு திருமணங்கள் செய்து கொண்டு வாழ முடியுமா.! இது சாத்தியமா என்று பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: