28 மனைவிகள் முன் 37-வது திருமணம் செய்த பலே தாத்தா - வைரல் வீடியோ

வீடியோ காட்சி

வயதான நபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, இது அவருக்கு 37-வது திருமணம்.

 • Share this:
  மன்னர் ஆட்சி காலத்தில் கேள்விப்பட்டது போல் தற்போது ஒரு தாத்தா 28 மனைவிகளுக்கு முன் 37-வது திருமணம் செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

  மன்னர் ஆட்சி காலத்தில் நாட்டை ஆளும் ராஜாக்கள் தனது வம்சத்தை விரிவுப்படுத்த பல திருமணங்கள் செய்து கொண்டு அதிகமான வாரிசுகளை பெற்றெடுப்பார்கள். அதுப்போன்ற கதைகளை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் அதுப்போன்ற சம்பவம் தற்போது  நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

  Also Read : உஷார்...! உங்கள் மொபைலில் இந்த 5 செயலிகள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்

  வயதான நபர் ஒருவர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, இது அவருக்கு 37-வது திருமணம், அதுவும் 28 மனைவிகளுக்கு முன் இந்த திருமணத்தை நடத்தி உள்ளார். அந்த 28 மனைவிகளும் திருமணம் முடிந்த பின் அந்த இளம்பெண்ணை உற்சாகமாக வரவேற்கிறன்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தாத்தாவிற்கு 37-வது திருமணம் என்பதே அதிர்ச்சியாக இருக்கும் போது அவரது பதிவில் மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. ரூபின் சர்மா தனது பதிவில், தைரியமான மனிதர். 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில்" என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த பலர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.  இந்த திருமணம் எங்கு நடைபெற்றது? இந்த திருமணத்தை செய்து கொண்டவர் யார் என்பது விபரங்கள் தெரியவில்லை. ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதால் இந்த வீடியோவை பலர் நம்பி அதனை ஷேர் செய்தும் கமெண்ட் செய்தும் வருகின்றனர். கல்யாணம் என்றாலே 90 கிட்ஸை கலாய்ப்பவர்கள் தற்போது இந்த வீடியோவை வைத்து மேலும் அவர்களை சிதைத்து வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: