28 மனைவிகள் முன்னிலையில் இளம்பெண்ணை 37வது திருமணம் செய்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்பு ராஜாக்கள் பலதார மணம் முடித்து வாழ்ந்ததாக கேள்வி பட்டிருப்போம். ஆனால், தற்காலத்தில் இது போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை திருமணம் செய்வதென்பது வரவேற்கதக்க செயலாக இல்லை. அதனால், சமுதாயத்தில் இதுபோன்ற நடைமுறைகள் மறைந்துவிட்டன. இருப்பினும் அங்கொன்றும், இங்கொன்றும் இது போன்ற திருமணங்கள் நடைபெறுகின்றன என்பதற்கு இந்த வீடியோவே ஆதாரம்.
வயதான நபர் ஒருவருக்கு அவரது 35 பிள்ளைகள், 169 பேரக்குழந்தைகள் மற்றும் 28 மனைவிகள் சூழ்ந்திருக்க 37வது மனைவியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோவினை ஐ.பி.எஸ் அதிகாரி ரூபின் ஷர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் ’வாழும் தைரியமான மனிதர்’ என தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் இளம்பெண் ஒருவருடன் தனது மகன், மகள், மனைவிகள், பேரக்குழந்தைகள் சூழ ஆரவாரத்துடன் கொண்டாட்டமாக திருமணம் செய்துகொள்கிறார்.
BRAVEST MAN..... LIVING
37th marriage in front of 28 wives, 135 children and 126 grandchildren.👇👇 pic.twitter.com/DGyx4wBkHY
— Rupin Sharma (@rupin1992) June 6, 2021
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, திருமணம் எங்கு நடந்தது போன்ற எந்த விவரமும் தெரியவில்லை. எனினும், சமூகவலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே, கடந்த ஜூன் மாதத்தில் வைரலாக பரவிய இந்த வீடியோ தற்போது மீண்டும் நெட்டிசன்களால் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage, Trending Video, Viral Video