ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Viral Video : ஐஸ்கிரீம் பிரியர்களே இந்த வீடியோவை பார்க்காதீங்க... இப்படியொரு ஃப்ளேவரில் ஐஸ்கிரீமா?

Viral Video : ஐஸ்கிரீம் பிரியர்களே இந்த வீடியோவை பார்க்காதீங்க... இப்படியொரு ஃப்ளேவரில் ஐஸ்கிரீமா?

ஐஸ்கிரீம் பிரியர்களே

ஐஸ்கிரீம் பிரியர்களே

Viral Video : அனைவரும் ஆசை, ஆசையாய் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம்களில் ஃப்யூஷன் என்ற பெயரில் சிலர் வினோதமான சுவையை கலந்து ரணகளப்படுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட புது ஃப்ளேவர் ஐஸ்கீரிம் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அதுவும் சம்மர் ஸ்டார்ட் ஆகிவிட்டால் சொல்லவே வேண்டாம், விதவிதமான ஐஸ்கிரீம்கள் வரிசை கட்டி அறிமுகமாகும். ஏராளமான வெரைட்டியையும், சுவையையும் கொண்டிருக்கும் ஐஸ்கிரீம்-ஐ தேடிச் சென்று உண்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதேபோல் எல்லாருமே ஏதாவது ஒரு ஐஸ்கிரீம் ஃப்ளேவருக்கு நிச்சயம் அடிமையாகி இருப்போம்.

ஐஸ்கிரீம் ஒரு எனர்ஜி பூஸ்டர் நமக்கு அதை சாப்பிடும் போதுகிடைக்கும் ஒரு குளிர்ச்சியான ஃபீல் பாசிட்டிவான எண்ணங்கள் மற்றும் புத்துணர்ச்சியை கொடுக்கும் என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  பிள்ளைகளுக்கு எல்லாம் ஐஸ்கிரீம் வண்டி சத்தை கேட்டாலே உற்சாகம் தொற்றிகொள்ளும்.

அப்படி அனைவரும் ஆசை, ஆசையாய் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம்களில் ஃப்யூஷன் என்ற பெயரில் சிலர் வினோதமான சுவையை கலந்து ரணகளப்படுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட புது ஃப்ளேவர் ஐஸ்கீரிம் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தி கிரேட் இந்தியன் ஃபுடி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், சமைக்கப்பட்ட மேகி நூடுல்ஸ் உடன் கீரிம் சேர்க்கப்பட்டு, நன்றாக கலக்குகிறார்கள். அதை நன்றாக ரோல் செய்து, குளிர்ச்சியூட்டி மேகி ஐஸ்கிரீம் ரோல் என்ற புது ஐஸ்கிரீமை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார்கள். டாபிங்ஸாக சாக்லெட் சீரப், ஜெம் மிட்டாய்களை வேறு போட்டுக்கொடுக்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்த ஐஸ்கிரீம் பிரியர்கள் எல்லாருக்கும் ஒரு கொடுங்கனவை கண்டது போல் இருப்பதாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை கண்டு மிரண்ட ஐஸ்கிரீம் பிரியர்கள் பலரும் விதவிதமாக கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர். “ஏய் இதை எல்லாம் பார்த்தால் ஐஸ்கீரிம் சாப்பிட ஆசையே போய்டும் போலயே... ஆள விடுடா சாமி” என கவுண்டமணி ஸ்டைலில் கதறுகின்றனர். ஒருவரோ ‘இதையா நான் பார்த்தேன் என் கண்ணை ஹோலி வாட்டர் விட்டு தான் கழுவ வேண்டும்’ என சகட்டு மேனிக்கு வெறுப்பை கொட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் :  ஆஹா!! இப்பவே சாப்பிடனும் போல இருக்கே... கேரளாவை கலக்கும் புட்டு ஐஸ்க்ரீம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சமூக வலைத்தளங்களில் புட்டு ஐஸ்கிரீம் வீடியோ தாறுமாறு வைரலானது. கேரளாவைச் சேர்ந்த உணவகம் ஒன்று ஓணத்தை முன்னிட்டு அறிமுகம் செய்த அந்த ஸ்பெஷல் ஐஸ்கிரீம் இப்போது திருவனந்தபுரம் முழுவதுமே செம்ம பிரபலமாகிவிட்டது. நிறைய பேர் புட்டு ஐஸ்கிரீமை தேடிச் சென்று வாங்கி சுவைத்து வருகின்றனர். இப்படி ஒரு ஐஸ்கிரீம் எப்படா நம்ம ஊருக்கு வரும் என காத்திருந்த உணவுப்பிரியர்களை, இப்படியொரு ஐஸ்கிரீம் வீடியோ வெளியாகி கடுப்பேற்றியுள்ளது.

இப்படியான வீடியோ வைரலான அதே சமூக வலைத்தளத்தில் மேகி ஐஸ்கிரீம் வீடியோவும் வெளியாகி, உணவு பிரியர்கள் வயிற்றில் புளி கரைக்க வைத்துள்ளது. ‘இது என்ன பிரமாதம்... இதை விட ஸ்பெஷல் ஐயிட்டம் ஒன்னு இருக்கு’ என்பது போல் மோமோ ஐஸ்கிரீம், சாக்லேட் பான் ஐஸ்கிரீம் ரோல், தோக்லா மற்றும் காந்த்வி ஐஸ்கிரீம் ரோல், மசாலா தோசை ஐஸ்கிரீம் ரோல் என அவ்வப்போது ஏதாவது ஏடாகூடமான ஃப்ளேவரில் ஐஸ்கிரீம் வீடியோக்கள் வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன.

First published:

Tags: Ice cream, Viral Video