ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உயரமான மலைகளுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி படுத்துக் கொண்ட நபர் - வைரலாகும் வீடியோ.!

உயரமான மலைகளுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி படுத்துக் கொண்ட நபர் - வைரலாகும் வீடியோ.!

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

Trending Video | உயரமான இரண்டு மலைகளுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி அதன் மீது படுத்துக் கொண்டே இயற்கையின் பேரழகை ரசிக்கும் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பேரதிசயம் கொண்ட இயற்கை காட்சிகளைப் பார்க்கும் தருணத்தில் அவற்றோடு ஒட்டி உறவாட வேண்டும் என்ற ஆசை எல்லோர் மனதிலும் துள்ளிக் குதிக்கும். எட்டும் தொலைவில் உள்ள மலைக் குன்றுகள், அருவிகள், ஆபத்தில்லாத ஆறுகள், பேரலை இல்லாத கடல் என்று எங்கெல்லாம் அபாயம் குறைவாக இருக்கின்றனவோ, அங்கெல்லாம் நீங்கள் இயற்கை தாயின் மடியோடு ஒட்டி உறவாடலாம்.

சின்னக் குழந்தை போல இயற்கையின் தாயின் மடியில் துள்ளிக் குதித்து விளையாடலாம். ஆனால், அழகான சில இயற்கை கட்டமைப்புகள் அபாயம் நிறைந்தவையாகவும் இருக்கும். உதாரணத்திற்கு மலை உச்சியில் உள்ள உயரமான சில அருவிகள் பார்ப்பதற்கு ரம்மியமாகக் காட்சியளித்தாலும், நீங்கள் அதன் அருகே செல்ல முடியாது.

செங்குத்தாக இருக்கின்ற மலைகளின் உச்சியில் ஏறிப் பார்க்க இயலாது. ஆனால், டிக்டாக், இன்ஸ்டா ரீல்ஸ் போன்ற டிரெண்டிங் வீடியோ கலாச்சாரம் வந்த பிறகு, அவரவர் திறனுக்கு ஏற்ற சாகசங்களை செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது வாடிக்கையாக மாறியுள்ளது.

அந்த வகையில், ரெடிட் இணையதளத்தில் பயனாளர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ, நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும், மனதில் திகில் உணர்வை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. அதாவது, உயரமான இரண்டு மலைகளுக்கு நடுவே அவர் ஊஞ்சல் கட்டி அதன் மீது படுத்துக் கொண்டே இயற்கையின் பேரழகை ரசிக்கிறார்.

அந்த உச்சியில் இருந்து கொண்டு, கேமராவில் அவர் படம்பிடித்துக் காட்டும் காட்சிகள், எவ்வளவு அபாயங்களுக்கு இடையே அவர் சொகுசாக படுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை காட்டுகின்றன. ஸ்பெயினில் உள்ள மலைப்பகுதியில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

Also Read : வயலில் இறங்கி வேலை பார்க்கும் நாயின் வைரல் வீடியோ!

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதனை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட யூசர்கள் பார்த்துள்ளனர். முதலில் ஒரு மலையின் மீது ஏறி, அதில் ஊஞ்சலின் ஒரு முனை கயிற்றைக் கட்டி விட்டு, பின்னர் மற்றொரு மலையின் மீது சுருக்குபோல கயிற்றை வீசி ஊஞ்சலைக் கட்டியிருக்கலாம் என தெரிகிறது.

Also Read : மனிதரை போல் காரில் கெத்தாக அமர்ந்து சென்ற நாய் - வைரல் வீடியோ.!

சாகச முயற்சிகள் பலன் அளிக்குமா.?

பொதுவாக சாதனை முயற்சிக்கும், சாகச முயற்சிக்கும் சின்னஞ்சிறு வித்தியாசம் உண்டு. அறிவார்ந்த மக்கள் அறிவு மற்றும் திறனைக் கொண்டு செய்ய நினைப்பது சாதனையாகும். இதை நோக்கி நம் பயணம் அமைவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், சாகசம் என்பது அசாத்திய தைரியத்தை வரவழைத்து கொண்டு, உயிரையும் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளும் அபாயம் நிறைந்த காரியமாகும். சிலருக்கு இது பிடித்தமானதாக இருக்கிறது மற்றும் செய்தும் காண்பிக்கின்றனர். ஆனால், சாமானிய மக்கள் எல்லோரும் இவ்வாறு சாகசம் செய்துதான் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதில்லை.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Trending, Viral Video