முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / செருப்பு திருடு போவதை தடுக்க இந்த பக்தர் செஞ்ச வேலைய பாருங்க..! - வைரலாகும் புகைப்படம்

செருப்பு திருடு போவதை தடுக்க இந்த பக்தர் செஞ்ச வேலைய பாருங்க..! - வைரலாகும் புகைப்படம்

சைக்கிளில் பூட்டப்பட்ட செருப்பு

சைக்கிளில் பூட்டப்பட்ட செருப்பு

பக்தர் ஒருவர் தனது சைக்கிளின் முன் பக்க சக்கரத்துடன் காலணியையும் சங்கிலி பூட்டில் இணைத்து பூட்டிவிட்டு  சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அங்காளம்மன் கோயிலில் செருப்பு திருடு போவதை தவிர்க்க பக்தர் ஒருவர் தன் செருப்பை சைக்கிளில் பூட்டு போட்டு மாட்டி சென்றுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் தனது சைக்கிளின் முன் பக்க சக்கரத்துடன் காலணியையும் சங்கிலி பூட்டில் இணைத்து பூட்டிவிட்டு  சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

வழக்கமாக தரிசனத்திற்கு செல்வர்கள் கோயிலின் வாசலில் காலணியை விட்டு செல்வது வழக்கம். ஆனால் சிலரது செருப்புகள் அடிக்கடி திருடு போகும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. அது போல் தனக்கு நிகழ்ந்து விட கூடாது என்பதற்காக கோயில் வாசலில் சைக்கிளையும் காலணியையும் பூட்டிவிட்டு சென்ற புகைப்படம் புதுச்சேரியில் தற்போது வைரலாகி வருகிறது.

First published:

Tags: Hindu Temple, Puducherry, Shoe