Home /News /trend /

துருக்கியில் பிரசித்தி பெற்ற கெபாப் வகையை வான்வெளியில் பறக்கவிட்ட நபர்!

துருக்கியில் பிரசித்தி பெற்ற கெபாப் வகையை வான்வெளியில் பறக்கவிட்ட நபர்!

 Turkey's Famous Adana Kebab : வான்வெளியில் சுமார் 40 கி.மீ ஆல்டிடியூட் அளவுக்கு பயணித்த அந்த பலூன் இறுதியாக வெடித்து, கடல் பகுதியில் விழுந்தது.

Turkey's Famous Adana Kebab : வான்வெளியில் சுமார் 40 கி.மீ ஆல்டிடியூட் அளவுக்கு பயணித்த அந்த பலூன் இறுதியாக வெடித்து, கடல் பகுதியில் விழுந்தது.

Turkey's Famous Adana Kebab : வான்வெளியில் சுமார் 40 கி.மீ ஆல்டிடியூட் அளவுக்கு பயணித்த அந்த பலூன் இறுதியாக வெடித்து, கடல் பகுதியில் விழுந்தது.

    உணவுகளை விளம்பரப்படுத்த பலரும் பல்வேறு முயற்சிகளை கையாளுகின்றனர். நாடு, இனம் மற்றும் மொழி சார்ந்து கூட வெவ்வேறு உணவு பழக்க, வழக்கங்கள் உலக மக்களிடையே இருக்கிறது. அந்த வகையில், தங்களுடைய உணவு பழக்கத்திற்கு புகழாரம் சூட்டும் வகையிலும், அதை விளம்பரப்படுத்தும் வகையில் புதுமையான வழிமுறையை கையாண்டிருக்கிறார் துருக்கியைச் சேர்ந்த கெபாப் கடை உரிமையாளர்.

    துருக்கியின் அடானா மாகாணத்தில் உள்ள இவரது உணவகத்தில் பைப் கெபாப் என்ற உணவு வகை மிகவும் பிரபலமான ஒன்றாகும். அந்த உணவை, ஹீலியம் பலூனில் வைத்து வான்வெளியில் பறக்க விட்டுள்ளார் இவர்.

    சோவியத் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் யூரி காகரின், கடந்த 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பூமியை முதன் முதலாக சுற்றி வந்தார். அந்த நாளானது சர்வதேச மனித விண்கலன் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், துருக்கியைச் சேர்ந்த கபாப் கடை உரிமையாளரான யாசர் ஐதீன், கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி சிறப்புமிக்க இந்த முயற்சியை மேற்கொண்டார்.

    Read More : நடுவானில் பாராசூட் கயிற்றில் நடந்து உலக சாதனை செய்த வினோத மனிதர் - திக் திக் நொடிகள்!


    இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்களது நகரம் மற்றும் உணவுப் பழக்கத்தை பிரபலபடுத்துவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். முதன்மையான விஷயங்களை முன்னெடுப்பது என ரொம்பவே பிடித்தமான ஒன்று’’ என்றார் அவர்.

    பிரத்யேக அனுப்பி வைக்கப்பட்ட கபாப்

    வான்வெளியில் கபாப் பறக்க விடும் புராஜக்டில் யாசர் ஐதீனுடன் சேர்த்து மொத்தம் 30 பேர் கலந்து கொண்டனர். ஸ்பேஸ் கபாப் பயணத்திற்கான பிரத்யேக பாக்ஸ் ஒன்றை அவர்கள் தயார் செய்தனர். ஸ்டிரைரோஃபோம் என்ற மெட்ரீலியலில் தயார் செய்யப்பட்ட அந்த பாக்ஸ், வெப்பத்தை எதிர்கொள்ளக் கூடியது என்று இந்தக் குழுவினர் தெரிவித்தனர். ஒட்டுமொத்த நிகழ்வும் கேமரா கொண்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.



     




    View this post on Instagram





     

    A post shared by Kaburgacı Yaşar (@kaburgaciyasar)






     

    வெளிப்புற வெப்பம் தாக்காத பாக்ஸில் அனுப்பி வைக்கப்பட்ட கெபாப் உணவானது, காற்றில் விழுந்துவிடாத படிக்கு, காற்றை எதிர்கொள்ளும் ஹீலியம் பலூனுடன் இணைத்து கட்டப்பட்டிருந்தது. வான்வெளியில் சுமார் 40 கி.மீ ஆல்டிடியூட் அளவுக்கு பயணித்த அந்த பலூன் இறுதியாக வெடித்து, கடல் பகுதியில் விழுந்தது.

    பலூன் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை தொழில்நுட்ப ரீதியாக கண்காணித்துக் கொண்டிருந்த அந்தக் குழுவினர், நடுக்கடலுக்குச் சென்று அதை மீட்டு வந்தனர். இதுகுறித்து, ஐதீன் நகைச்சுவையாக குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “நாங்கள் அனுப்பி வைத்த கெபாப் உணவை ஏலியன்கள் திருப்பி அனுப்பியுள்ளார்கள் எனக் கருதுகிறேன். ஏனென்றால், அதில் மிக அதிகமான பெப்பர் இருந்தது. அடுத்த முறை பெப்பர் காரம் குறைந்த உணவை நான் அனுப்பி வைப்பேன்’’ என்றார் அவர்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending, Turkey, Viral

    அடுத்த செய்தி