ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பயமறியான்.. இதுதான் வாவா சுரேஷ்.. திடீரென வைரலாகும் ராஜநாக கிஸ் வீடியோ!

பயமறியான்.. இதுதான் வாவா சுரேஷ்.. திடீரென வைரலாகும் ராஜநாக கிஸ் வீடியோ!

ராஜ நாகத்தின் தலையில் முத்தம் கொடுத்த நபர்

ராஜ நாகத்தின் தலையில் முத்தம் கொடுத்த நபர்

ராஜ நாகத்தில் தலையில் முத்தமிடும் காட்சி இணைத்தில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  நாகங்களின் ராஜாவான ராஜ நாகத்திற்கு வாவா சுரேஷ் தலையில் முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

  200 ராஜ நாகங்களைப் பிடித்து சாதனை செய்த கேரளா மாநிலத்தை வாவா சுரேஷ் என்பவரின் படையெடுத்து நிற்கும் ராஜ நாகத்தின் தலையில் முத்தம் இட்டுள்ளார். பழைய வீடியோ என்றாலும் தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பாம்புகளில் அதிக வீரியமான விஷத்தை உடைய ராஜ நாகத்தில் தலையில் முத்தமிடுவது என்பது சாதாரணமான காரியம் இல்லை என்ற நிலையில் அவர் அதை எளிமையாகச் செய்வதை நெட்டிசன்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

  வாவா சுரேஷ் என்ற கேரளாவைச் சேர்ந்த நபர் இது வரை வாழ்நாளில் சுமார் 200 ராஜ நாகங்கள் மற்றும் 38,000 சுற்றித் திரியும் பாம்புகளைப் பிடித்துள்ளார். பாம்புகளை பாதுகாப்பது, பாம்பு முட்டைக்களை பாதுகாத்துப் பொரிக்க வைப்பது, பாம்புகள் வாழ நல்ல சூழ்நிலையை அமைத்துத் தருவது என்று பல சேவைகளை செய்து வருகிறார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Saurabh Jadhav Jadhav (@10_viper_21)  மேலும் மக்கள் பகுதியில் சுற்றித் திரியும் பாம்புகளை மீட்டு அவரை காட்டில் விடுவதை வழக்கமாகவே வைத்துள்ளார். அப்படி ஒரு நாள் அவர் கேரளாவில் ஒரு ராஜ நாகத்தைப் பிடிக்கச் சென்ற போது ராஜ நாகம் கடித்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சமீபத்தில் கூட வாவா சுரேஷின் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  Also Read : வாழும் அதிசயம்.. காண்போரை ஆச்சரியத்தில் மிரள வைக்கும் வீடியோ!

  இந்த நிலையில் தற்போது வாவா சுரேஷின் வீடியோ வைரலாகி வருகிறது.

  Published by:Janvi
  First published:

  Tags: Kerala, King cobra, Viral Video