வியாபாரம் செய்வதாக கூறி பணம் வாங்கி இப்படியா செய்வது... அதிர்ச்சியில் பணம் கொடுத்த தம்பதியினர்

மாதிரி படம்

வியாபாரம் செய்வதாக கூறி பணம் வாங்கி ஆபாச படங்கள் பார்த்த அமெரிக்க வாழ் இந்தியருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
வினோத் இயக்கத்தில் வெளியான 'சதுரங்கவேட்டை' படமே நூதன முறையில் ஏமாற்று வேலையில் ஈடுபடும் ஒருவரை பற்றிய கதை தான். அந்த படம் கள யதார்த்தத்தை மிக தத்ரூபமாக பதிவு செய்திருந்த காரணத்தால் அந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. 'ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசையத் தூண்டனும்' என அந்த படத்தின் வசனம் மிக பிரபலம்.

உண்மையிலேயே வித விதமான ஏமாற்று வேலையில் ஈடுபடும் நபர்கள் குறித்து எவ்வளவு செய்திகள் வெளியானாலும் மக்கள் ஏமாற்றப்படுவது தொடர்கதையாகத் தான் இருக்கிறது. காரணம் மக்களின் பேராசை. இது இந்தியாவில் மட்டுமல்ல. உலக அளவில் வல்லரசு நாடுகளை சேர்ந்த மக்களும் இதில் அடக்கம். இந்நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் நூதன முறையில் 1.26 அமெரிக்க டாலரை ஏமாற்றியுள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் மணீஷ் சிங், கடந்த 2016 ஆம் ஆண்டு துணி வடிவமைப்பு வியாபாரம் செய்யவிருப்பதாகக் கூறி ஒரு தம்பதியினரிடம் 1.26 அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளார். அவர்களிடையே இதுகுறித்து ஒப்பந்தமும் போடப்பட்டிருக்கிறது. அதாவது பணத்தை தம்பதியினர் தருவது, வியாபாரத்தை மணீஷ் சிங் கவனித்துக்கொள்வது என்பது தான் ஒப்பந்தம். ஆனால் அந்த பணத்தை மணீஷ் சிங் தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்.

குறிப்பாக இணையதளங்களில் நேரடி ஆபாச படங்களை பார்த்துள்ளார். இந்நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை அந்த தம்பதியினர் அறிந்த பின்னர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்ததையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது மணீஷ் சிங்கிற்கு எதிராக ஆதாரங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நீதிமன்றத்தில் மணீஷ் சிங் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பொதுவாக அமெரிக்கா என்றாலே உயர்வான சிந்தனைகள் தான் மக்கள் மனதில் எழும். அங்கே அனைவரும் அறிவாளிகள். இந்தியர்கள் அனைவரும் ஒப்பீட்டளவில் அவர்களை விட அறிவில் குறைந்தவர்கள் என்ற பரவலான நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. ஆனால் ஏமாறுவது என்றால் எல்லா ஊர் மக்களும் ஒரே மாதிரி தான் என்பதை காட்டுகிறது இந்த செய்தி.

மக்களின் பேராசை தான் இதற்கெல்லாம் காரணம். அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை காட்டி மக்களை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விடும் சீட்டுக்கம்பெனி முதலாளிகள் பற்றிய செய்திகளை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஆனாலும் இன்றளவும் அந்த மோசடி நடந்துகொண்டு தான் இருக்கிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: