கிரிக்கெட் மைதானத்தில் போட்டியின்போது பெண்ணிடம் தவறாக நடந்த பார்வையாளர்: வைரலாகிய வீடியோ - நெட்டிசன்கள் கண்டனம்

தவறாக நடந்துகொண்ட பார்வையாளர்

கிரிக்கெட் போட்டியின் பெண்ணிடம் தவறாக நடந்த பார்வையாளர்களுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

 • Share this:
  இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் அருகிலிருந்த பெண்ணிடம் நடந்துகொண்ட முறைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

  கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே முடங்கியுள்ளது. உலக அளவில் நடைபெறக் கூடிய விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் கடந்த ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டன. இந்த ஆண்டும் கொரோனா பாதிப்பு இருந்தாலும் பல கட்டுப்பாடுகளுடன் பல நாடுகளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

  விளையாட்டுப் போட்டிகள் பெரும்பாலும் பார்வையாளர்கள் இல்லாமலே நடந்துவருகிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றுவரும் யூரோ கோபைத் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இங்கிலாந்திலும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.


  இங்கிலாந்தின் லண்டனில் உள்நாட்டு தொடரான டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் கடந்த ஜூன் 16-ம் தேதி சர்ரே மற்றும் மிடில்செக்ஸ் அணிகள் மோதின. அப்போது, பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு பின் அவருக்கு பின்னாடி இருந்தவர்களிடம் எழுந்து நின்று பேசினார். அப்போது, அந்த பெண்ணின் அருகிலிருந்தவர் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சில விநாடிகள் மட்டுமே நடைபெற்ற இந்தச் செயல் கேமராவில் பதிவாகி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பின்னர், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தப் பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டது அவரது காதலரா, கணவரா அல்லது அறிமுகம் இல்லாத நபரா என்று விவரம் தெரியவில்லை. இருப்பினும், பொது இடத்தில் தவறாக நடந்துகொண்டவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கைவைத்துவருகின்றனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
  Published by:Karthick S
  First published: