Home /News /trend /

செலவைக் குறைப்பதற்காகக் காபி மெஷினில் சிக்கனை சமைத்த நபர்: டெக்சாஸில் சுவாரசியம்!

செலவைக் குறைப்பதற்காகக் காபி மெஷினில் சிக்கனை சமைத்த நபர்: டெக்சாஸில் சுவாரசியம்!

அந்த நபர் பதிவிட்ட புகைப்படம்

அந்த நபர் பதிவிட்ட புகைப்படம்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒருவர் காபி மெஷினை பயன்படுத்தி சிக்கனை சமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaAmericaAmericaAmerica
அலெக்சாண்டர் கோஹன் என்னும் டெக்ஸாஸை சேர்ந்த நபர் தன்னுடைய “Linkedin” பதிவில் அவர் எவ்வாறு காப்பி இயந்திரத்தைப் பயன்படுத்தி சிக்கனை சமைத்தார் என்பதைத் தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி தன்னுடைய Linkedin சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர் எவ்வாறு காபி மெஷினை பயன்படுத்திக் குறைந்த செலவில் சிக்கனை சமைத்தேன் என்பதைத் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட அந்த பதிவு வெகு விரைவிலேயே அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பல்வேறு விதமான கருத்துக்களைப் பெற்று வருகிறது.

அவர் பதிவேற்றம் செய்துள்ள அந்த படத்தில் காபி மெஷினின் மீது சிக்கனை வைத்து அதன் மீது வெண்ணெய் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றைத் தடவிச் சமையல் செய்வது போன்ற புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்துள்ளார்

”நான் வேலை விஷயமாகப் பல இடங்களுக்கும் பயணம் செய்து வருகிறேன் அது போன்ற சமயங்களில் மிக வசதியான ஓட்டலில் ஆடம்பரமான இரவு உணவுகளை உண்பதை பெரும் அளவில் நான் விரும்பவில்லை. எனவே மிகக் குறைந்த செலவில் உணவைச் சமைப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன்.



அவ்வாறு நான் தங்கிய ஒரு ஓட்டலில் சமையலறை இல்லை. எனவே அங்குள்ள காப்பி மெஷினை பயன்படுத்தி உணவைச் சமைக்க முடிவு செய்தேன். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நான் பணிபுரியும் நிறுவனத்தில் எனக்கு ஆடம்பரமான உணவுகளை உண்பதற்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இருந்தாலும் எனக்கு அந்த ஆடம்பர செலவுகளைச் செய்ய மனம் வரவில்லை. நான் அந்த பணத்தைச் சேமிக்க விரும்பினேன். மேலும் இது போன்ற விஷயங்கள் உங்களது ப்ரமோஷனுக்கு மிகவும் உதவும் எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவை அவரே ஸ்கிரீன்ஷாட் எடுத்து தன்னுடைய டிவிட்டர் வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார்.

Also Read : மடக்கி வைக்கப்படும் மாடிப்படி - வைரல் வீடியோ.!

இது பற்றி பலர் அவரை பாராட்டினாலும் ஒரு சில இணையவாசிகள் அவரின் இந்த செயலை கண்டித்து வருகின்றனர். மேலும் சிலரோ நீங்கள் இப்படிச் சமைத்து விட்டுப் போய் விடுவீர்கள் ஆனால் உங்களுக்குப் பிறகு காபி குடிக்க வருபவர்களின் நிலைமையைப் பற்றி சற்றாவது சிந்தித்துப் பார்த்தீர்களா என்றும் அவரை வசை பாடி வருகின்றனர்.



ஆனால் உண்மையில் காபி மெஷினை பயன்படுத்திச் சமையல் செய்வது இது முதல் முறையல்ல. இவரது இந்த பதிவைப் பார்த்த பலர் தாங்கள் எவ்வாறு பலவித முறைகளைப் பயன்படுத்திச் சமையல் செய்தோம் என்பதை வெளிப்படையாகப் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் நம் அன்றாடம் அயன் செய்யும் “அயன் பாக்ஸை” கவிழ்த்து வைத்து அதன் மீது சமையல் செய்துள்ளது இணைவாசிகளை இன்னும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
Published by:Janvi
First published:

Tags: Chicken, Viral

அடுத்த செய்தி