தனுஷின் ‘சுள்ளான்’ பட பாணியில் மெட்ரோ ரயிலில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

actor dhanush

பெண்கள் இருக்கையில் தனுஷ் அமர்ந்திருப்பதை பார்த்து இது பெண்கள் சீட், அதிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என சிந்து துலானி  கூறுவார்.

  • Share this:
மெட்ரோ ரயிலில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணுக்கு எழுந்து நின்று இடம் கொடுத்த வாலிபரின் செயல், தனுஷின் சுள்ளான் படத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது. இருப்பினும் அடுத்து நடந்த அந்த எதிர்பாராத செயலால் அந்த இளைஞர் அதிர்ந்தார். அப்படி என்ன தான் நடந்தது.?

தனுஷ் நடிப்பில் 2004-ல் வெளியான சுள்ளான் படத்தில் ஒரு காட்சி உண்டு, அரசு பேருந்தில் பெண்கள் சீட்டில் அமர்ந்தவாறு தனுஷ் கல்லூரிக்கு சென்று கொண்டிருப்பார், அப்போது ஒரு நிறுத்தத்தில் நாயகி சிந்து துலானி பேருந்தில் ஏறுவார்.

பெண்கள் இருக்கையில் தனுஷ் அமர்ந்திருப்பதை பார்த்து இது பெண்கள் சீட், அதிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என சிந்து துலானி  கூறுவார். ஆனால் ஊனமுற்றோர் போல பாசாங்கு செய்து சிந்து துலானியை ஏமாற்றுவார் தனுஷ்.பிறகு கல்லூரி வந்தவுடன் துள்ளிக் குதித்து நாயகி சிந்து துலானியிடம் பேசுவார் அவர். இதே போன்று ஒரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது.

Also Read:    மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

urban._jatts என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டிருந்தது. அதில் மெட்ரோ ரயிலில் சீட்கள் ஏதும் காலியாக இல்லாமல் கூட்டமாக இருக்கிறது, அப்போது கையில் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் ஏறுகிறார்.
அங்கே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணுக்கு உதவும் என்னத்துடன் அவரை கூப்பிட்டு தனது இருக்கையில் அமர வைத்துவிட்டு அவர் எழுந்து அருகே நிற்கிறார். ஆனால், இருக்கையில் அமர்ந்த அப்பெண், மடியில் குழந்தைக்கு பதிலாக குரங்கு பொம்மை ஒன்றை வைத்திருப்பதை பார்த்து அந்த வாலிபர் ஏமாந்து போனதை உணர்ந்து அப்பெண்ணை கடிந்து கொள்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருப்பினும் அந்த இளைஞரின் பாவனைகளை அழகாக படம்பிடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது போல ஏமாற்று சம்பவங்களை ‘பிராங்க்’ என பெயரிடுகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த பலரும் சிரிக்கின்றனர். சிலர் கடிந்துகொள்கின்றனர். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செய்யுங்கள்...
Published by:Arun
First published: