10 பீர்கள் குடித்து விடிய விடிய தூங்கிய நபர்... சிறுநீர்ப்பை சிதைந்ததால் விபரீதம்

சீனாவில் 10 பீர்கள் குடித்து விட்டு 18 மணி நேரமாக தூங்கிய நபருக்கு சிறுநீர்ப்பை சிதைவு ஏற்பட்டு அவசர சிகிச்சையில் சேர்க்கப்பட்டார்.

10 பீர்கள் குடித்து விடிய விடிய தூங்கிய நபர்... சிறுநீர்ப்பை சிதைந்ததால் விபரீதம்
கோப்பு படம்
  • Share this:
சீனாவை சேர்ந்த 40 வயதான ஹூ என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவர் தொடர்ச்சியாக 10 பீர்களை குடித்துவிட்டு தொடர்ந்து 18 மணி நேரமாக சிறுநீர் கூட கழிக்காமல் தொடர்ச்சியாக தூங்கி உள்ளார்.

இதையடுத்து காலையில் எழுந்தவர்க்கு வயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது சிறுநீர்ப்பை சேதமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

Also Read : போலி ஆணுறுப்பு மூலம் போதைப் பொருள் கடத்திய நபர்... வசமாக பிடிப்பட்டது எப்படி?


அதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் சிறுநிர்ப்பை சிதைவை மருத்துவர்கள் சரிசெய்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் ஹூ இயல்புநிலைக்கு திரும்பி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரமாக சிறுநீரை கழிக்காமல் அடைத்து வைத்திருந்ததே இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திப்பது உடலுக்கு பல ஆபத்துகளை விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading