Home /News /trend /

அம்மா பயிற்சி பெற்ற அதே அகடாமியில் பட்டம் பெற்ற மகன் - 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தரமான சம்பவம்!

அம்மா பயிற்சி பெற்ற அதே அகடாமியில் பட்டம் பெற்ற மகன் - 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தரமான சம்பவம்!

தனது அம்மா ராணுவ பயிற்சி பெற்ற அதே அகடாமியில் பட்டம் பெற்ற மகன்

தனது அம்மா ராணுவ பயிற்சி பெற்ற அதே அகடாமியில் பட்டம் பெற்ற மகன்

கிட்டதட்ட 27 ஆண்டுகளுக்கு முன்பு தான் கேடட் ஆக பயிற்சி பெற்ற அதே பயிற்சி அகடாமியில் இருந்து தனது மகனும் பட்டம் பெற்றுள்ளதை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கும் ஸ்மிதா சதுர்வேதி, தான் பயிற்சி பெற்ற காலங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    நாட்டிற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றிய கதைகள் எப்போதுமே நெஞ்சை உலுக்கும் விதமாக இருக்கும். அப்பாவிற்கு பிறகு மகன், அண்ணனுக்கு பிறகு தம்பி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டை காக்க முன்வரும் பல உணர்ச்சி மிக்க செய்திகளை படித்திருப்போம். அதேபோல் தற்போது தாய் ஒருவர் தான் பயிற்சி பெற்ற அதே ராணுவ பயிற்சி அகாடமியில், தனது மகன் பட்டம் பெற்றுள்ளதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த சம்பவம், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் கடந்த ஜூலை 30ம் தேதி அன்று, பாஸிங் அவுட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 125 ஆண்களும், 41 பெண் கேடட்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தான் அம்மாவும், மகனும் ஒரே பயிற்சி அகடாமியில் பயிற்சி பெற்ற அற்புதமான விஷயம் நடந்துள்ளது.

    சென்னை ராணுவ கேடட் பயிற்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தாய் மற்றும் மகனின் புகைப்படத்துடன் இந்த உணர்வுப்பூர்வமான கதையும் பகிர்ந்துள்ளார். "ஒரு பெண் ராணுவ அதிகாரிக்கு இன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணமாக மாறியுள்ளது. ஓய்வு பெற்ற மேஜர் ஸ்மிதா சதுர்வேதி, 1995ம் ஆண்டு 27 ஆண்டுகளுக்கு முன்பு தான் பயிற்சி பெற்ற சென்னை ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் தனது மகனும் பட்டம் பெற்றதை கண்டு நெகிழ்ந்தார்” என பதிவிடப்பட்டுள்ளது. சென்னை பயிற்சி அகாடமியில் கேடட்டாக மேஜர் ஸ்மிதா சதுர்வேதியின் பழைய புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.



    இந்த ட்விட்டர் பதிவிற்கு வீடியோ மூலமாக நன்றி தெரிவித்துள்ள முன்னாள் ராணுவ அதிகாரியான ஸ்மிதா சதுர்வேதி, "மகனைப் பொறுத்தவரை, இது மிகப்பெரிய விஷயம் மற்றும் எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம். இன்று தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களையும் வாழ்த்த விரும்புகிறேன். மேலும், OTA அவர்களை நன்றாக வளர்த்ததற்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

    Also Read : ஒன்றல்ல, இரண்டல்ல... வயிற்று வலி என வந்த நபருக்கு ஸ்கேனில் தெரிந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

    கிட்டதட்ட 27 ஆண்டுகளுக்கு முன்பு தான் கேடட் ஆக பயிற்சி பெற்ற அதே பயிற்சி அகடாமியில் இருந்து தனது மகனும் பட்டம் பெற்றுள்ளதை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கும் ஸ்மிதா சதுர்வேதி, தான் பயிற்சி பெற்ற காலங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். சென்னை ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் தான் பயிற்சி பெற்றதை விட தற்போது பல மடங்கு முன்னேறி இருப்பதாக தெரிவித்துள்ளார். இங்கு நான் பயிற்சி பெற்ற காலத்தில் இல்லாத நிறைய புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மெஸ்கள், மாணவர்கள் வசிக்கும் இடத்தில், கேடட்கள் வசிக்கிறார்கள் என மாற்றத்தை எண்ணி வியந்துள்ளார்.

    மேலும் சென்னை ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடாமி, கேடட்களை அதிகாரிகளாக்கும் வேலையை சிறப்பாக செய்துள்ளதாக பாராட்டியுள்ள ஸ்மிதா சதுர்வேதி, எங்களை விட புதிய சவால்களை எதிர்கொள்ள இளம் தலைமுறை துடிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்த சோசியல் மீடியா பதிவு வைரலானதை அடுத்து, அம்மா மற்றும் மகனுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். “பெருமைமிக்க தருணம். லேடி அதிகாரி மற்றும் அவரது மகன், இருவருக்கும் பெருமையானது” என ஒரு யூஸர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் “அம்மாவுக்கும், மகனுக்கும் இது பெருமையான தருணம். கடவுள் அவர்களுக்கு அனைத்தையும் ஆசீர்வதிக்கட்டும். ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்” என பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி