லண்டன் வீதிகளில் நிர்வாணமாக ஓடிய நபர்... அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை அதிகாரிகள்!

லண்டன் வீதிகளில் நிர்வாணமாக ஓடிய நபர்

நிர்வாணமாக நடந்து சென்ற அந்த நபர் குறித்து அங்கிருந்த மக்கள் உள்ளூர் காவல் துறைக்கு தகவல் அளித்திருந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தை அடைந்தபோது, அந்த நபர் அந்த இடத்தில் தென்படவில்லை.

  • Share this:
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கிட்டத்தட்ட பல மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தும் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அதிதீவிரமாக பரவியது. இதனால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக பல நாடுகளும் அறிவித்தன. அதற்குள்ளாகவே இந்தியா உட்பட சில நாடுகளில் உருமாறிய கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். இங்கிலாந்தில் இதுவரை 97,939 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் இங்கிலாந்து மக்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வீட்டிற்கு அருகில் ஒரு கி.மீ தூரத்திற்கு மட்டும் மக்கள் நடந்து செல்லவும், செல்லப்பிராணிகளை அழைத்து செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பாக காணப்படும் நகரம் மக்கள் நடமாட்டம் இன்றி தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த நிலையில், லண்டன் வீதிகளில் ஒரு நபர் நிர்வாணமாக ஓடிக்கொண்டிருப்பதை கண்டு மக்களும், காவல்துறை அதிகாரிகளும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஜன.24ம் தேதி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் நிர்வாணமாக ஓடிய இளைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் நிர்வாணமாக நடந்து சென்ற அந்த நபர் குறித்து அங்கிருந்த மக்கள் உள்ளூர் காவல் துறைக்கு தகவல் அளித்திருந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தை அடைந்தபோது, அந்த நபர் அந்த இடத்தில் தென்படவில்லை. இந்த சம்பவத்தை நேரில் கண்ட 22 வயதான கேத்தரின் என்பவர் தனியார் பத்திரிகைக்கு தெரிவித்தாவது, "அந்த நபர் ப்ளூம்ஸ்பரி ஸ்கொயர் கார்டனை நோக்கி விரைவாக நடந்து கொண்டிருந்தார். பின்பு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை கடந்தார். அங்கிருந்த கார்டன் பகுதியை அடைந்த போது சுற்றிலும் திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் நடந்து சென்றார் எனக் கூறினார்.

அந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியில் அந்த நபரை பார்த்ததாக கேத்தரின் தெரிவித்தார். மேலும், நடைபாதையில் நடந்து சென்ற ஒரு பாதசாரி, அந்த நபரிடம் ஏன் ஆடைகள் இல்லை என்று கேட்டபோது, தன்னைக் கழுவுவதற்காக தனது ஆடைகளை கழற்றிவிட்டதாக அந்த நபர் விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நபர் தனது மனநிலையை முற்றிலும் இழந்து விட்டாரோ என பல மக்கள் கருதுகின்றனர். மேலும், நிர்வாணமாக நடந்து சென்ற நபரை காவல்துறை அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களை நிர்வாணமாக நடந்து சென்ற நபரை கண்டுபிடிக்கமுடியவில்லை. வீட்டிலேயே முடங்கி இருந்ததால் மனஅழுத்தம் காரணமாக அந்த நபர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்பதும் தெரியவில்லை.
Published by:Arun
First published: