ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தாகத்தில் தவித்த பென்குயினுக்கு தண்ணீர் கொடுத்த நபர்.. க்யூட் வீடியோ!

தாகத்தில் தவித்த பென்குயினுக்கு தண்ணீர் கொடுத்த நபர்.. க்யூட் வீடியோ!

நெகிழ வைக்கும் வீடியோ

நெகிழ வைக்கும் வீடியோ

பிறந்து சில நாட்களேயான பென்குயினுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய மனிதரின் வீடியோ ஒன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிறந்து சில நாட்களேயான பென்குயினுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய மனிதரின் வீடியோ ஒன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மனிதர்கள் எப்பொழுதெல்லாம் அன்பை வெளிப்படுத்துகிறார்களோ அப்பொழுதெல்லாம் மிக அழகாகவே தெரிகிறார்கள். அதிலும் முக்கியமாக வாயில்லா ஜீவன்களிடம் அன்பாக பழகும் மனிதர்களை யாருக்குத்தான் பிடிக்காது. மனிதர்களுக்கும் வாயில்லா ஜீவன்களுக்கும் இடையே உள்ள உறவு எப்பொழுதும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அந்த வகையில் அனைவரையும் நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறந்து சில நாட்களே ஆன பென்குயின் குஞ்சு ஒன்று, மிகுந்த தாகத்துடன் இருக்கும்பொழுது அதற்கு தண்ணீர் கொடுத்து உதவும் மனிதரின் வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது. இந்த பென்குயினின் வீடியோ அனைவரது இதயத்தையும் கவர்ந்துள்ளது. இதனை பார்க்கும் நீங்களும் மனதளவில் அமைதியாகவும் அழகாகவும் உணர்வீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஜாப்ரியல் கார்னோ என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ, தற்போது வரை நான்கு லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

Read More : பயமறியான்.. இதுதான் வாவா சுரேஷ்.. திடீரென வைரலாகும் ராஜநாக கிஸ் வீடியோ!

அந்த வீடியோவில் முகம் தெரியாத அந்த மனிதரை நோக்கி தாகத்துடன் இருக்கும் பென்குயின் குஞ்சு அழகாக ஆடி அசைந்து நடை போட்டு வருகிறது. அந்த பென்குயின் குஞ்சு இவரைப் பார்த்து சிறிதளவு கூட பயம் கொள்ளவில்லை. மிக சாதாரணமாக இவரிடம் நடந்து வந்த அந்த பெண் குயின் குஞ்சுக்கு, தனது கையில் உள்ள பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் உள்ள நீரை சிறிது சிறிதாக குடிக்க கொடுக்கிறார் அந்த மனிதர். பென்குயினும் ஆவலோடும் தாகத்தோடும் அந்த நீரை எவ்வித பயமும் இன்றி குடிக்கிறது. “தாகம் உடைய பென்குயின்” என்று வாசகங்களை இணைத்து இந்த வீடியோவை அவர் ட்விட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

ஒரு நாளைக்கு முன் பகிரப்பட்ட இந்த வீடியோ, பதிவிடப்பட்ட நேரத்தில் இருந்து தற்போது வரை 26 ஆயிரம் லைக்குகளுக்கும் மேல் பெற்றுள்ளது. அதைவிட அந்த வீடியோவின் கமெண்ட் பகுதி தான் இன்னும் அற்புதமாக உள்ளது. இணையவாசிகள் பலரும் இந்த அழகான வீடியோவை பார்த்துவிட்டு “ஹார்ட் எமோஜி”யை பயன்படுத்தி கமெண்ட் பகுதியை நிரப்பி வருகின்றனர். அதில் இணையவாசி ஒருவர் ”ஓ கடவுளே! எங்கே இவனது அம்மா? மிகக் குட்டியாக இருக்கிறான் இவன், இவனாலே இவனுக்கு எதாவது ஆபத்து ஏற்பட கூடும்” என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

மற்றொரு இணையவாசி “சோ க்யூட், இன்றைய நாளின் மிகச்சிறந்த ட்வீட் இதுவாகத்தான் இருக்கும்” என்று பதிவு செய்துள்ளார்.

மற்றொருவர் பென்குயின் குஞ்சுக்கு குடிக்க தண்ணீர் குடித்த அந்த மனிதரைப் பாராட்டி “நமக்கு இவரை போன்ற பல நல்ல மனிதர்கள் தேவை/ கடவுளின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு” என்று தனது வாழ்த்தையும் பாராட்டையும் பதிவு செய்துள்ளார்.

நான்காவது மனிதர் “அழகான இந்த பென்குயின் குஞ்சை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral