முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / அம்மா சொன்ன கடைசி வார்த்தைக்காக... இணையத்தில் பலரது இதயத்தையும் கவர்ந்த கதை

அம்மா சொன்ன கடைசி வார்த்தைக்காக... இணையத்தில் பலரது இதயத்தையும் கவர்ந்த கதை

லட்சக்கணக்கில் செலவிடும் முதியவர்

லட்சக்கணக்கில் செலவிடும் முதியவர்

அன்பை பரப்புவதற்காக சொந்த பணத்தை செலவழித்து வரும் முதியவரின் கதை இணையத்தில் பலரது இதயத்தையும் கவர்ந்திழுத்து வருகிறது.

உலகம் முழுவதும் அன்பை பரப்பும் நோக்கத்துடன் முதியவர் ஒருவர், யாரென்றே தெரியாத நபர்களுக்கு பணம் கொடுத்து வருகிறார். தனது செய்தியைப் பரப்பும் முயற்சியில், இதுவரை அவர் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள வாஃபிள் ஹவுஸில் சந்திக்கும் முன், பின் தெரியாத நபர்களுக்கு $13 ஆயிரத்திற்கும் அதிகமான அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளார்.

இந்த செய்தி உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறதா?. ட்விட்டரில் யூஸரான கெவின் கேட் என்பவர், ஒரு உணவக மேசையில் அமர்ந்திருக்கும் முதியவர் கையில் பணத்தை வைத்திருக்கும் போட்டோ வைரலானதை அடுத்து இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘ஒவ்வொருவரையும் நேசி’ என்ற வாசகத்துடன் டாலர் நோட்டுக்கள் அடங்கிய கவரையும் கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் முதியவரின் படம் அது.

படத்தைப் பகிர்ந்துள்ள ​​கெவின் "இந்த மனிதர் புளோரிடாவின் மிட்வேயில் உள்ள ஒரு வாப்பிள் ஹவுஸில் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டேன். அதனால் நான் வணக்கம் சொல்லி அந்த பணத்தை என்ன செய்கிறார் என கேட்டேன். கெவின் கேள்விக்கு பதிலளித்த அந்த முதியவர், 2014 முதல், தெரியாத நபர்களுக்கு $1 மற்றும் $5 டாலர்களை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்”

இதை விட அடுத்தடுத்து அந்த முதியவர் கூறிய விஷயங்கள் தான் கெவின் உடைய ஆர்வத்தை மிகவும் தூண்டியுள்ளது. அந்த முதியவர் கடந்த எட்டு ஆண்டுகளில், புளோரிடாவின் மிட்வேயின் வாஃபிள் ஹவுஸில் தான் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களிடமும் $1 மற்றும் $5 டாலர்கள் வீதம், இதுவரை 13 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளாராம் (இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய்). வேறு சில இடங்களிலும் அந்நியர்களுக்கு பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆர்வம் காரணமாக கெவின் அந்த முதியவரிடம் மேலும் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ALSO READ | ZOHO நிறுவனம் 2,000 பணியாளர்களை நியமிக்கத் திட்டம்

அதற்கு அந்த முதியவர் ​​"அந்நியர்கள், குழந்தைகள் மற்றும் வாஃபிள் ஹவுஸ் (அவருக்குப் பிடித்தது) மற்றும் பிற இடங்களில் தான் சந்திக்கும் நபர்களுக்கு பணம் கொடுத்ததாக அவர் கூறினார்."

கெவின் ஆர்வத்தின் காரணமாக அந்த முதியவரிடம் மேலும் வினா எழுப்பியபோது, ​​"அந்நியர்கள், குழந்தைகள் மற்றும் தனக்கு மிகவும் பிடித்தமான நபர்கள், முகம் தெரியாத நபர்கள் என பலருக்கும் இதுவரை $13,000-க்கும் அதிகமான அமெரிக்க டாலர்களை வாரி வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த முதியவர் இப்படி சொந்த பணத்தை யாரென்றே தெரியாத நபர்களுக்கு தானமாக கொடுப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதியவர் வெறும் பணத்தை மட்டும் பிறருக்கு கொடுப்பதில்லை. அத்துடன் சேர்ந்து ‘ஒவ்வொருவரையும் நேசி’ என்ற அன்பை போதிக்கும் துண்டு செய்தியையும் வழங்கிறார். அப்படி ஒரு துண்டறிக்கையை கொடுக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு, முதியவர் கெவினிடம் தனது தாய் பற்றிய ஒரு அழகான கதையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

முதியவர்

அந்த முதியவரிடம் அவருடைய அம்மா மரணிக்கும் தருவாயில் கடைசியாக ‘ஒவ்வொருவரையும் நேசி’ என தெரிவித்துள்ளார். இறக்கும் தருவாயில் கூட மகனை பார்த்து ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என சொல்லாமல், ஒவ்வொருவரையும் நேசி என தனது தாய் சொன்ன வார்த்தைகள் அந்த முதியவரின் மனதில் ஆழமாக பதிந்தது. எனவே தான் அந்த வார்த்தையை அன்பின் மந்திரமாக அனைவரது மனதிலும் பதிய வைக்க நினைத்தார்.

அன்பை போதிக்கும் அந்த வாசத்துடன் சில டாலர்களையும் சேர்த்து தனக்கு அறிமுகமே இல்லாத நபர்களுக்கு கடந்த 7 வருடங்களாக வழங்கி வருகிறார். இந்த செய்தி ட்விட்டரில் வைரலானதை அடுத்து பலரும் தங்களது இதயம் கனிந்த வாழ்த்துக்களை முதியவருக்கு பகிர்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Love, Mother