கோட்டாவை சேர்ந்த பொறியாளர் சுஜீத் ஸ்வாமி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனக்கு கிடைத்த பதிலை மேற்கோள் காட்டி, ரூ2.98 லட்சம் ஐஆர்சிடிசி பயனாளிகளுக்கு ரூ. 2.43 கோடி பணத்தைத் திரும்பப்பெற ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
ஜிஎஸ்டி நடைமுறை அமலுக்கு வருவதற்கு முன்பு தனது பயணச்சீட்டை ரத்து செய்த போதிலும், சேவை வரியாக விதிக்கப்பட்ட ரூ.35 ஐ திரும்ப பெறுவதற்கான தனது போராட்டத்தில் கிட்டத்தட்ட 50 தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ததாகவும், நான்கு அரசுத் துறைகளுக்கு கடிதங்களை அனுப்பியதாகவும் சுவாமி கூறி உள்ளார்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் தனது ஆர்டிஐ கேள்விக்கு அளித்த பதிலில் 2.98 லட்சம் பயனாளிகளும், ஒவ்வொரு டிக்கெட்டின் மீதும் ரூ. 35 திரும்பப் பெறுவார்கள், அதாவது மொத்தம் ரூ. 2.43 கோடியை திரும்ப பெறுவார்கள். பிரதமர், ரயில்வே அமைச்சர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரைக் குறிவைத்து நான் திரும்பத் திரும்ப செய்த ட்வீட்களின் விளைவாகவே 2.98 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.35 பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான வழி கிடைத்துள்ளது என்பதையும் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
இது என்ன வழக்கு?
சுஜீத் ஸ்வாமி, 30 வயதான பொறியாளர், புதிய ஜிஎஸ்டி நடைமுறை அமலுக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு, ஜூலை 2 ஆம் தேதி ரயில் பயணத்தை மேற்கொள்வதற்காக 2017 ஆண்டு 'கோல்டன் டெம்பிள் மெயில்' மூலம் தனது நகரத்திலிருந்து புது டெல்லிக்கு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்தார். இருப்பினும், அவர் ரூ.765 விலையிலான டிக்கெட்டை ரத்துசெய்தார், ஆனால் ரத்துசெய்ததற்கு எதிராக ரூ.65 க்கு பதிலாக ரூ.100 கழிப்புடன் ரூ.665 ஐ மட்டுமே அவர் திரும்பப் பெற்றார்.
அதாவது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வருவதற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்திருந்தாலும் கூட, கூடுதல் தொகையாக ரூ.35 அவரிடம் சேவை வரியாக வசூலிக்கப்பட்டது. இதை தவறு என்று சுட்டிக்காட்ட விரும்பிய சுவாமி, ரயில்வே மற்றும் நிதி அமைச்சகத்திற்கு ஆர்டிஐ வழியிலான கேள்விகளை அனுப்பி, அந்த 35 ரூபாயை திரும்பப் பெறுவதற்கான போராட்டத்தைத் தொடங்கினார்.
Also see...எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி
ஒருகட்டத்தில், "அந்த 35 ரூபாய் திருப்பி தரப்படும்" என்று ஐஆர்டிசி ஒற்றுக்கொண்டது. ஆனால் சுவாமி தனது வங்கிக் கணக்கில் 2 ரூபாய் கழிப்புடன் 33 ரூபாயை மட்டுமே பெற்று உள்ளார். பின்னர் அந்த 2 ரூபாயை திரும்பப் பெறுவதற்காக ஸ்வாமி அடுத்த மூன்று ஆண்டுகளாக தனது போராட்டத்தைத் தொடர்ந்தார், அது இறுதியாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அவருக்கு பலனைத் தந்தது.
Also see... பீர் பாட்டில்களுக்கு நடுவில் கோப்பை; கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி
"சுமார் 50 ஆர்டிஐகள், ரயில்வே, ஐஆர்சிடிசி, நிதி அமைச்சகம் மற்றும் சேவை வரித் துறைக்கு கடிதங்கள் அனுப்பி நான் நடத்திய போராட்டம் என்னுடன் சேர்த்து அனைத்து பயனாளிகளுக்கும் பயனாக அமைந்துள்ளதில் நான் திருப்தி அடைகிறேன். அனைத்து பயனாளிகளுக்கும் ரூ.35 ஐ திரும்ப கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, எனது ஐந்தாண்டு போராட்டத்திற்காக ரூ.100 சேர்த்து, ப்ரைம் மினிஸ்டர் கேர்ஸ் ஃபண்டிற்கு ரூ. 535 நன்கொடையாக அளித்துள்ளேன்" என்றும் சுவாமி கூறி உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Train