ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Viral Video : நெருங்கும் கோடை... தாகத்தால் தவித்த பாம்புக்கு தண்ணீர் அளித்த நபர் - குவியும் பாராட்டு

Viral Video : நெருங்கும் கோடை... தாகத்தால் தவித்த பாம்புக்கு தண்ணீர் அளித்த நபர் - குவியும் பாராட்டு

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : கோடை காலம் நெருங்கி விட்ட நிலையில் இளைஞர் ஒருவர் பாம்பிற்கு தண்ணீர் அளித்து தாகம் தீர்த்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோடைகாலம் நெருங்கி விட்டது. காலம் காலமாக கோடைகாலம் என்றால் மனிதர்களை விட விலங்குகள் தான் அதிக இன்னல்களுக்கு உள்ளாகும். கோடை காலத்தில் மரங்கள் இலைகள் உதிர்ந்து கோடை வெயிலுக்கு இரையாவதால் மண்ணில் வாழும் விலங்குகள், பறவைகள் சொல்ல முடியா துயரத்திற்கு ஆளாகின்றன. பறவைகளும், விலங்குகளும் மரங்களையும் , வாழ்விடத்தையும் இழந்து கோடையில் உணவும் , தண்ணீரும் கிடைக்காமல் உயிர் இழந்து போகும் நிலையும் ஏற்படுகின்றது.

கோடைக்காலம் (Summer) என்பது நான்கு பருவகாலங்களில் வசந்த காலத்திற்கும் இலையுதிர் காலத்திற்கும் இடையே வரும் வெப்பம் மிகுந்த காலமாகும். தற்போது நம் நாட்டில் கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. இதனை நினைவூட்டும் விதமாக ட்விட்டரில் இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா (Susanta Nanda IFS) பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், பச்சை நிற பாம்பு ஒன்று தாகத்தில் இருக்கின்றது. அதற்கு இளைஞர் ஒருவர் தனது கைகளில் நீரை ஊற்றி பாம்பின் தாகம் தீர்க்கிறார். தாகம் தீர்ந்தவுடன் தண்ணீர் அருந்துவதை பாம்பு நிறுத்திக் கொள்கின்றது. இந்த வீடியோ பலரின் கவனம் பெற்று வைரலாகி உள்ளது.

இந்த வீடியோவின் தலைப்பில் இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா (Susanta Nanda IFS) ஒரு விழிப்புணர்வு பதிவையும் பதிவு செய்துள்ளார். அதில், கோடை காலம் நெருங்குகிறது. சிறு துளி தண்ணீர் கூட ஒருவரின் உயிரைக் காப்பாற்றும். உங்கள் தோட்டத்தில் சிறிது தண்ணீரை ஒரு கொள்கலனில் விடவும், அது பல விலங்குகளின் வாழ்க்கை மற்றும் விலங்குகள் இறக்காமல் இருப்பதற்கு வழி வகை செய்யும் என பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவை இதுவரை ட்விட்டரில் 221 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். 15 பேர் quote tweet செய்துள்ளனர். 1,650 பேர் லைக் செய்துள்ளார். இந்த வீடியோவின் கீழே கமெண்ட்ஸ் செய்பவர்கள் , இளைஞர் தண்ணீர் அளித்து பாம்பின் தாகம் தீர்த்த செயல் நல்லகாரியம். எனது வீட்டின் அருகே வரும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இதே போன்று தண்ணீர் வைக்க போகிறேன் எனவும் பதிவு செய்து நினைவூட்டியதற்கு நன்றி என கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Viral Video