• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • இன்ஸ்டாகிராம் ஃபில்டர்ஸ் போல தோற்றமளிக்க 30,000 டாலர்கள் செலவில் சிகிச்சை செய்துக்கொண்ட இங்கிலாந்து நபர்!

இன்ஸ்டாகிராம் ஃபில்டர்ஸ் போல தோற்றமளிக்க 30,000 டாலர்கள் செலவில் சிகிச்சை செய்துக்கொண்ட இங்கிலாந்து நபர்!

சிகிச்சை செய்துக்கொண்ட இங்கிலாந்து நபர்

சிகிச்சை செய்துக்கொண்ட இங்கிலாந்து நபர்

நெட்டிசன்கள் இவரை மாஸ்க் ஆஃப் தி பர்ஜுடன் ஒப்பிட்டு வருகின்றனர். அதாவது, அசல் முகத்தை காட்டாமல் முகமூடி அணிந்துக்கொண்டு மக்களை அச்சுறுத்தும் நபர் என்பது அதன் பொருள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்ஸ்டாகிராம் பில்டர்ஸ் போன்ற தோற்றத்தை பெறுவதற்காக மான்செஸ்டரைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய நபர் சுமார் 30,000 யூரோ டாலர்கள் செலவழித்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட வினோத சம்பவம் இங்கிலாந்தில் அரங்கேறியுள்ளது.

மேலும் இவர், தனது தோற்றத்திற்காக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். நெட்டிசன்கள் இவரை மாஸ்க் ஆஃப் தி பர்ஜுடன் ஒப்பிட்டு வருகின்றனர். அதாவது, அசல் முகத்தை காட்டாமல் முகமூடி அணிந்துக்கொண்டு மக்களை அச்சுறுத்தும் நபர் என்பது அதன் பொருள். லெவி ஜெட் மர்பி என்ற அந்த இளைஞர், தனது உதடுகள், கன்னம், தாடை மற்றும் கண்களுக்குக் கீழே ஃபில்லர்ஸை பெற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதோடு, லிப் லிப்ட், டெம்பிள் லிப்ட், கேட்-அய் லிப்ட், நோஸ் ஜாப் மற்றும் பற்களை நேராக்குதல் போன்ற மாறுபாடுகளை செய்துள்ளார்.

தனது ஒப்பனை நடைமுறைகளின் சிகிச்சை முடிவுகளில் லெவி ஜெட் மர்பி திருப்தி அடைந்திருந்தாலும், அவர் தனது தோற்றத்திற்காக சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்களையும், ட்ரோல்களையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும் தோற்றத்தில் திருப்தியடைவதால் எந்த விதமான நெகட்டிவ் கமெண்ட்டுகளையும் தனது இதயத்திற்கு எடுத்துச் செல்லவில்லை என்று லெவி கூறியுள்ளார்.

இதுகுறித்து LADbible உடன் பேசும்போது, தனது 19 வயதில் லிப் ஃபில்லருக்கு தனது முதல் ஒப்பனை அறுவை சிகிச்சை செய்ததைப் பற்றி வெளிப்படுத்தினார். அதன் முடிவை நேசித்தபின், அவர் ஒரு மாதத்திற்குப் பிறகு மேலும் சில ஒப்பனை அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டார். இதையடுத்து தனது 20 வயதில், அவர் கன்னம், தாடை மற்றும் கண்களுக்கு கீழ் ஃபில்லர்களை பெறத் தொடங்கினார். இதையடுத்து சமீபத்தில் தான் தனது நோஸ் ஜாப் மற்றும் லிப் லிப்ட் சிகிச்சைகளை செய்துகொண்டார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், "நான் ஒரு போதும் எனது அசல் தோற்றத்தை வெறுத்ததில்லை. ஆனால் எனது முகம் எனக்கு எளிதில் சலிப்பை கொடுத்துவிட்டது. எனவே நான் எனது தோற்றத்தை மாற்ற விரும்பினேன்" என்று கூறினார். மேலும் தனது புகழ் காரணமாக, லெவி பல விளம்பரங்களில் பணிபுரிவதால் தனக்கான டாப்-அப்களை இலவசமாகப் பெறுகிறார். அவர் விஷயங்களை தனித்துவமாக செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார். இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு முன்னர் இருப்பதை போலவே இப்போது உள்ள முகத்தோற்றத்துடன் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Also read... Baba Ka Dhaba 2.0 - சாலையோர கடைக்காரருக்கு உதவ முன்வந்த Zomato!

அவர் இந்த முகத்தோற்றத்திற்காக சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இங்கிலாந்தை ஒப்பிடும்போது, சிகிச்சைகளின் செலவு மிகக்குறைந்ததாக இருப்பதால் துருக்கியைத் தேர்ந்தெடுத்துள்ளார். லெவி தனது காதலனுடன் ஒரு வெற்றிகரமான ஓன்லிஃபேன்ஸ் (OnlyFans) கணக்கை நடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் சில்லறை வணிகத்தில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை விட 10 மடங்குக்கு மேல் அதிகமாக சம்பாதிக்கிறார். இதுவே விலையுயர்ந்த அறுவை சிகிச்சைகளை செய்ய அவரை ஊக்குவித்துள்ளது.

அவர் தனது அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி பேசுகையில், "இன்ஸ்டாகிராம் ஒரு ஃபில்டரை வெளியிட்டது. அது ஒருவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டால் எவ்வாறு தோற்றமளிப்பார் என்பதைக் காண்பிக்கும். மேலும் அந்த ஃபில்டர் தோற்றத்தை பெற விரும்பினேன். எனவே பில்டர்களில் காட்டப்பட்ட வெவ்வேறு நடைமுறைகளைச் செய்துகொண்டேன்" என்று கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: