மூளை, நுரையீரல் என்று உடல் முழுவதும் ஆக்கிரமித்த 700 நாடாப்புழுக்கள்...! இறைச்சியால் வந்த விபரீதம்

சமைக்காத இறைச்சிளில் நாடாப்புழுக்களின் முட்டைகள் வாழும். அதை நீங்கள் சாப்பிட்டால் உடலில் ஊடுருவி பரவி தொற்றுகளைப் பரப்பும்

மூளை, நுரையீரல் என்று உடல் முழுவதும் ஆக்கிரமித்த 700 நாடாப்புழுக்கள்...! இறைச்சியால் வந்த விபரீதம்
News18
  • News18
  • Last Updated: November 22, 2019, 4:36 PM IST
  • Share this:
மூளை, நுரையீரல் என்று உடலின் பல உறுப்புகளை சுமார் 700 நாடாப்புழுக்கள் ஆக்கிரமித்துள்ள அதிர்ச்சி தரும் சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சுகாதாரம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒன்று. அது சரியாக இருந்தால் கிருமிகளும் விலகியே இருக்கும். இதற்கான விழிப்புணர்வுகள் இருந்தாலும் தினம் தினம் மருத்துவத் துறையில் புதுவிதமான, அதிசயிக்கத்தக்க விஷயங்களை சந்திக்கிறோம். அப்படி சீனாவைச் சேர்ந்த ஒருவர் வேகவைக்காத இறைச்சி சாப்பிட்டதால் அவரின் உடலில் 700 நாடாப்புழுக்கள் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 43 வயதான் ஸூ ஸோங் என்பவர் ஒரு மாதமாக தலைவலி, வலிப்பு என அவதிப்பட்டு வந்துள்ளார். அதுவரை மருத்துவமனை செல்லாமல் வலியின் தீவிரம் அதிகரித்தபின் மருத்துவரை நாடிய அவர், தலைவலி தானே மாத்திரை கொடுத்து அனுப்பிவிடுவார்கள் என்று நம்பிச் சென்றவருக்கு மிக்கபெரிய ஷாக் காத்திருந்துள்ளது.


ஆரம்பகட்ட பரிசோதனைகள் முடிந்த பின்னர், பின் ஜியாங் ரோங் என்ற தொற்றுநோய் மருத்துவரிடம் ஸோங் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போதுதான் அவருக்கு நாடாப்புழுக்களால் அஜீர கோளாறு ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின் தீவிர சிகிச்சை அளித்து உடலின் ஒவ்வொரு பகுதியாக ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அப்போதுதான் அவருடைய மூளை, மார்புப் பகுதி, நுரையீரல் என 700க்கும் மேற்பட்ட நாடாப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு உறுப்புகளாக நாடாப்புழுக்கள் ஆக்கிரமித்திருப்பது நோயாளிக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது.

“சமைக்காத இறைச்சிகளில் நாடாப்புழுக்களின் முட்டைகள் வாழும். அதை நீங்கள் அப்படியே சாப்பிடும் போது,  சமைக்காத இறைச்சி மூலம் புழுக்கள் உடலில் ஊடுருவி பரவி தொற்றுகளைப் பரப்பும்” என்று மருத்துவர் கூறியுள்ளார்.
First published: November 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்