Home /News /trend /

காரை திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... நண்பனால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

காரை திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... நண்பனால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

நண்பனால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்

நண்பனால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்

கலிபோர்னியாவில் காரில் உயிருள்ள முதலையுடன் சுற்றித்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாய், பூனை, லவ் பேர்ட்ஸ் போன்றவற்றை நாம் செல்லபிராணியாக வளப்பது போல், அமெரிக்கா போன்ற நாடுகளில் பலரும் விநோதமான விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்ந்து வருகின்றனர். குறிப்பாக பலவகையான பாம்பு இனங்கள், ஹேம்ஸ்டர், பச்சோந்தி, சிலந்தி, தோள் போன்றவற்றை செல்லபிராணியாக வளர்ந்து வருகின்றனர்.

சிலர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட விலங்குகளை செல்லப்பிராணியாக வளர்த்து, காவல்துறையிடம் கையும் களவுமாக சிக்குவதும் உண்டு. அப்படிப்பட்ட சம்பவம் தான் கலிபோர்னியாவில் அரங்கேறியுள்ளது. அங்கு முதலையுடன் காரில் சுற்றித்திருந்த இளைஞரை கலிபோர்னியா போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

கலிபோர்னியாவை சேர்ந்த ஆண்டர்சன் காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வட கலிபோர்னியாவில் உள்ள ஆண்டர்சன் பகுதியில் இளைஞர் ஒருவர் குடித்துவிட்டு கார் ஓட்டியதாக 29 வயதான டெய்லர் வாட்சன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது அவர் சொன்னதை கேட்டு அங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆம், கைதுக்கு பின்னர் போலீசார் வாட்சனிடம் வழக்கமான சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது அவர் தனது காரில் முதலை ஒன்று உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக காரை திறந்து பார்த்த போலீசார், அங்கு பயணிகள் இருக்கையில், வாயில் டேப் சுற்றப்பட்ட நிலையில் குட்டி முதலை ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, கலிபோர்னியா மீன் மற்றும் வனவிலங்குத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விலங்கு கட்டுப்பாட்டு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பான விவரங்களை ஆண்டர்சன் பகுதி காவல்துறையினர் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது. அத்துடன் போலீசார் அந்த முதலை குட்டியுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வாட்சன் தற்போது சாஸ்தா கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது நண்பர் சிறைக்கு சென்றுவிட்டதால் கடந்த ஒருவாரமாக முதலையை தான் பராமரித்து வருவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டோடு, தற்போது சட்டவிரோதமாக உயிருள்ள முதலையை வைத்திருந்ததற்காகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அனுமதியின்றி கலிபோர்னியாவில் முதலையை செல்லப்பிராணியாக வைத்திருப்பது சட்டவிரோதமாகும். 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், வேட்டையாடுதல் மற்றும் வர்த்தகத்திற்காக முதலைகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டன. இதனால் 1950களில் அமெரிக்காவில் முதலைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. எனவே வணிகம் மற்றும் பொழுதுபோக்கு காரணங்களுக்காக முதலைகளை வேட்டையாடுவது 1992ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. 1966 இன் அழிந்துவரும் உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முதலைகள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 5 மில்லியன் முதலைகள் இருப்பதாகவும், அதில் 1.25 மில்லியன் முதலைகள் புளோரிடாவில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Also read... கல்யாணத்துக்கு அழைப்பு இல்லாமல் வரக் கூடாது, குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது - இது மணப்பெண்ணின் கன்டிஷன்

இளைஞர் ஒருவர் காரில் உயிருள்ள முதலையுடன் சுற்றிய சம்பவம் கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாட்சன் வைத்திருந்தது வளர்ந்த முதலை அல்ல குட்டி தான் என்பதால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என ஆண்டர்சன் போலீசார் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending

அடுத்த செய்தி