முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இல்ல எனக்கு புரியல.. விமான டிக்கெட் புக்கிங் குளறுபடியால் கடுப்பான இளைஞர் - ட்விட்டரில் வைரலாகும் பதிவு

இல்ல எனக்கு புரியல.. விமான டிக்கெட் புக்கிங் குளறுபடியால் கடுப்பான இளைஞர் - ட்விட்டரில் வைரலாகும் பதிவு

விமான டிக்கெட் புக்கிங்

விமான டிக்கெட் புக்கிங்

ஹைதராபாத்திலிருந்து பெங்களூருவுக்கு பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்த இளைஞருக்கு, பெங்களூரு கிளம்பும் இடமாகவும் பெங்களூரு சென்று சேரும் இடமாகவும் டிக்கெட் பதிவாகி இருந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரயில், விமானம் அல்லது பேருந்து பயணத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, கிளம்பும் இடம் மற்றும் சென்று சேரும் இடத்தை கவனமாக உள்ளிட வேண்டும். டெஸ்டினேஷன் என்பதை தவறாக உள்ளிட்டு, தவறான இடத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்த அனுபவங்களும் இருக்கும். ரவுன்ட் டிக்கெட்டாக இல்லாமல், புறப்படும் இடத்துக்கே டிக்கெட் வாங்க முடியாது. ஆனால், சமீபத்தில் ஒரு விமான டிக்கெட்டை வாங்கிய இளைஞருக்கு, விமான நிறுவனம் புறப்படும் இடத்துக்கே டிக்கெட்டை வழங்கிய சம்பவம் வைரலாகப் பரவி வருகிறது.

ஆதித்யா வெங்கடேஷ் என்ற இளைஞர், ஏர் ஆசியா விமானத்தில், ஹைதராபத்தில் இருந்து பெங்களூரு செல்ல விமான டிக்கெட் பதிவு செய்து இருக்கிறார். ஆனால், டிக்கெட் பதிவு உறுதியாகி கன்ஃபர்மேஷன் வரும் போது, பெங்களூருவிலிருந்து பெங்களூருவுக்கு டிக்கெட் பதிவாகி உள்ளது.

அதே நேரத்தில், பெங்களூருவில் இருக்கும் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மதியம் 2:20 க்கு கிளம்பும் அந்த விமானம் கொல்கத்தாவில் இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமானத்தில் மதியம் 3:30க்கு வந்தடையும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகின் காஸ்டலி காய்கறி இது தான்... ஒரு கிலோவின் விலையை கேட்டால் ஆடி போவீங்க

ஹைதராபாத்திலிருந்து பெங்களூருவுக்கு பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்த இளைஞருக்கு, பெங்களூரு கிளம்பும் இடமாகவும் பெங்களூரு சென்று சேரும் இடமாகவும் டிக்கெட் பதிவாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல், அதில் மற்றொரு பிழையாக கொல்கத்தாவுக்கு விமானம் செல்லும் என்ற தகவலும் டிக்கெட்டில் அச்சாகி இருக்கிறது.

டிக்கெட்டில் இந்த விவரங்களை பார்த்து குழம்பிய அந்த இளைஞர், உடனடியாக ஏர் ஆசியாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, ‘இது மிகவும் குழப்பமாக இருக்கிறது. இந்த மாதிரி நான் டிக்கெட் புக் செய்யவில்லை. ஆனால் இந்த டிக்கெட்டை வைத்துக் கொண்டு நான் எந்த இடத்திற்கு பயணம் செய்ய முடியும், எங்கிருந்து கிளம்பி எங்கு சென்று சேர முடியும்?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு ஏர் ஆசியா நிறுவனம் உடனடியாக அது ஏதோ தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம். பக்கத்தை ரெஃப்ரெஷ் செய்து புதிதாக மற்றொரு முறை புக்கிங் செய்யுமாறு  நிறுவனம் பதில் அளித்திருந்தது.

அதற்கு ஆதித்யா ‘இது தொழில்நுட்ப கோளாறு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. நான் மீண்டும் இந்த முன்பதிவு செய்வதை மாற்றுவதற்கு முயற்சி செய்தேன். ஏற்கனவே இருக்கும் புக்கிங்கை குரோம் பிரௌசர் மற்றும் ஆண்ட்ராய்டு ஃபோன் என்று எல்லா தளத்திலும் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் மறுபடியும் அதே விவரத்தை தான் காட்டுகிறது. இது கடைசி நிமிடத்தில் செய்யப்பட்ட மாற்றம் என்பதால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை’ என்று பதில் அளித்திருந்தார்.

ட்விட்டரில் இந்த பதிவு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றிருக்கிறது. அது மட்டுமல்லாமல், பல யூசர்களும் வேடிக்கையாக கமெண்ட் தெரிவித்து வந்திருக்கின்றனர். இதில் ஒரு யூசர் ‘நல்ல வேளை, ஏர் ஆசியா நிறுவனம் நீங்கள் செல்லுமிடத்தை மாற்றுமாறு கோரவில்லை’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

இந்த மாதிரியெல்லாம் நடந்தால் பேஜ் ரெஃப்ரெஷ் செய்து பார்க்க வேண்டும் என்று கூடவா நமக்கு தெரியாது. ஆப் இன்ஸ்டால், அன் இன்ஸ்டால், ரீ இன்ஸ்டால் என்று எல்லாவற்றையும் நாம் முயற்சி செய்துவிட்டுத்தான் புகார் அளிப்போம். இந்த மாதிரி பதில் சொல்வதற்கு பதிலாக, நிறுவனம் சரியான தீர்வுகளை வழங்க வேண்டும் என்று மற்றொரு யூசர் அலட்சியமான பதிலை சுட்டிக்காட்டி கமெண்ட் செய்திருக்கிறார்.

சரி ஆதித்யாவுக்கு என்னதான் நடந்தது, பயணம் செய்தாரா?

இந்த ட்விட்டர் பதிவு தற்போது வரை வைரலாக பகிரப்பட்டு வரும் நிலையில், ஆதித்யா சரியான டிக்கெட் முன்பதிவு செய்து விட்டதாகவும், அவரும் அவருடைய உதவியாளரும் சரியான நேரத்தில் பெங்களூருவை வந்தடைந்து விட்டதாகவும் அப்டேட் செய்திருந்தார்.

First published:

Tags: Air Asia, Flight travel