ஒரே ஒரு பிரேக்அப் தான்...காதலனின் ட்ரிக்சை கம்பெனியில் போட்டுக்கொடுத்த முன்னாள் காதலி!

மாதிரி படம்

பிரேக் அப்பிற்கு பிறகு காதலனை பழிவாங்கும் எண்ணத்தில் காதலி இந்த வேலையை பார்த்துள்ளார்.

  • Share this:
8 மணி நேர வேலையை வெறும் 2 மணி நேரத்திலேயே முடித்து விட்டு மீதி நேர வேலைகளை வீட்டில் இருந்த படியே ஆட்டோமேஷனை பயன்படுத்தி ஜாலியாக நேரத்தை கழித்து வந்த காதலனை, பிரேக்அப்புக்கு பிறகு முன்னாள் காதலி முதலாளியிடம் போட்டுக்கொடுத்துள்ளார்.

ஒரே நிறுவனத்தில் இருவரும் பணிபுரிந்து வந்த நிலையில், காதலனின் வேலை தந்திரத்தை மேலிடத்தில் போட்டுக்கொடுத்த பிறகு இத்தனை காலமாக வேலை செய்வதாக கூறி அனைவரையும் எவ்வாறு ஏமாற்றினார் என்பதை காதலன் தனது ரெடிட் வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பிரேக் அப்பிற்கு பிறகு காதலனை பழிவாங்கும் எண்ணத்தில் காதலி இந்த வேலையை பார்த்துள்ளார்.

இருப்பினும் மனம் தளராமல், தான் எவ்வாறு வேலையில் ஓபி அடித்தேன் என்பதை அந்த நபர் விளக்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, " நான் எப்போதும் எனது வேலையில் திறமையாகவும் சக ஊழியர்களை விட மிக வேகமாகவும் செயல்படுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ |  நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது ஏன் தலைவலி உண்டாகிறது..? சரி செய்யும் வழிமுறைகள் என்ன..?

பெரும்பாலும் ஒரே கணக்கீடுகளைக் கொண்ட அறிக்கைகளை எழுத்துவதாகவும் மற்றும் மிகவும் சரியான கணக்கீடுகளை தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெறும் 2 மணி நேரத்தில் தனது வேலையை முடித்துவிட்டு, மீதி 5 மணிநேரத்தில் தான் விரும்பிய எதையும் செய்து நேரத்தை கழித்து வந்ததாக" அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மாதிரி படம்


எவ்வாறு அவரால் அப்படி செய்ய முடியும் என்று யோசிக்கிறீர்களா? இது குறித்து விளக்கம் அளித்த அந்த நபர், இதற்காக ஒரு பெரிய தரவுத்தளத்தை உருவாக்கி, அதை மைக்ரோசாஃப்ட் எக்செல் உடன் இணைத்துள்ளார். இதன் மூலம் அவர் செய்ய வேண்டிய வேலைகளை எக்செல் கணக்கிடும். மேலும் இது பல்வேறு வாக்கியங்களை தானியக்கமாக்கிய பின்னர் மைக்ரோசாஃப்ட் வேர்டுக்கு ஏற்றுமதி செய்யலாம்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

ALSO READ | எமோஷனல் துஷ்பிரயோகம் பற்றி தெரியுமா? நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

இதன் மூலம் 8 மணி நேரம் வேலை செய்யும் தனது சகாக்களை விட தான் 2 மணி நேரத்தில் செய்து விடுவதாக அந்த பதிவில் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த தனது காதலிக்கு அவர் தனது தந்திரத்தை செய்து காட்டியுள்ளார்.

மேலும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சிறிது காலம் கழித்து நான் அவளுடன் உறவை முறித்துக் கொண்டேன். நாங்கள் எங்களால் முடிந்தவரை ஒன்றாக இருக்க முயற்சித்தோம். ஆனால் அவள் இருந்ததைப் போல என்னால் அவளிடம் அன்பை உணரமுடியவில்லை. எனவே, எங்கள் உறவை விரைவில் முடித்துக்கொள்வது நல்லது என்று நான் உணர்ந்தேன். பிறகு பிரிந்தது ஓரளவு அமைதியானதாகத் தோன்றியது," என்று அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ |  உங்களின் வாழ்க்கைத் துணை உங்களை ஏமாற்றினாலும் அவர்களை விட்டு நீங்கள் ஏன் பிரிவதில்லை!

நாங்கள் பிரிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு ஒழுங்கு விசாரணைக்காக பணியிடத்தில் உள்ள எச்.ஆரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் மிகவும் திகிலுடன் இருந்தபோது, முந்தைய நாட்களில் எனது வேலை செயல்பாட்டின் ஸ்கிரீன் ஷாட்கள் எனக்கு வழங்கப்பட்டன.

மீம்ஸ், வர்த்தக செயல்பாடு, செய்தி வாசிப்பு, யூடியூப் மற்றும் எத்தனை மணிநேரம் நான் உண்மையில் வேலை செய்தேன், நான் எவ்வளவு நேரம் வீணடித்தேன் போன்ற தரவுகள் எனக்கு கிடைத்தன. நான் எனது முன்னாள் காதலிக்கு அனுப்பிய அனைத்து ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் நிறுவனத்திற்கு அனுப்பியதால் இந்த விசாரணையில் தான் சிக்கி கொண்டதாக அந்த பதிவில் விளக்கியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: