Break Up-ஆல் வந்த வினை: காதலரின் சீக்ரெட்களை போட்டுக்கொடுத்து அலுவலக வேலைக்கு ஆப்பு வைத்த காதலி!

மாதிரி படம்

இந்த சீக்ரெட்டை எனது அலுவலகத்தில் பணியாற்றும் எனது காதலிக்கும் தெரிவித்தேன். இதன் பிறகு சிறிது காலம் கழித்து எனக்கும் அவளுக்கும் பிரேக் அப் ஆனது. அவளை பிரியக்கூடாது என முயற்சித்தேன் இறுதியில் சுமூகமாகவே இருந்தது எங்கள் பிரிவு.

  • Share this:
8 மணிநேர அலுவலக வேலையை தினமும் 2 மணி நேரத்தில் முடிக்க வழியைக் கண்டுபிடித்த நபர், அது குறித்து அவருடைய காதலிக்கு தெரியப்படுத்திய நிலையில், காதல் முறிவுக்கு பின்னர் இது குறித்து மேல் அதிகாரிக்கு காதலி போட்டுக்கொடுத்ததால் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டது குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் விவரம் சுவாரஸ்யத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் நபர் ஒருவர் Reddit பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் வீட்டிலிருந்தே பணியாற்றி வரும் அந்த நபர் எவ்வாறு 8 மணி நேர வேலையை, ஆட்டோமேஷன் முறையை பயன்படுத்தி மோசடியாக இரண்டு மணி நேரத்தில் செய்து முடித்தேன் என்பது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது, “நான் எப்போதும் அலுவலகத்தில் பிறரை விட பல மடங்கு வேகமாக என்னுடைய பணியை முடித்துவிட்டு அவர்கள் தரும் அதே ரிப்போர்டை அனுப்பி வைப்பேன். இதனால் எனக்கு தினமும் 5 மணி நேரம் மிச்சமாகிறது. அந்த நேரத்தில் நான் விரும்பியவற்றை செய்வேன். வியப்பாக இருக்கிறதா?

நான் மிகப்பெரிய டேட்டாபேஸ் ஒன்றை உருவாக்கி அதனை மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் உடன் இணைத்துவிட்டேன். எக்செல் எனக்காக கேல்குலேட் செய்து ஆட்டோமேட் செய்யும், பின் அதனை நான் மைக்ரோசாஃப்ட் வேர்டுக்கு எக்ஸ்போர்ட் செய்வேன். இந்த மொத்த பணிகளுக்குமே எனக்கு 2 மணி நேரம் தான் தேவை. ஆனால் இதையே எனது சகாக்கள் செய்ய 8 மணி நேரம் தேவைப்படும்.

Also Read:  கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கிய 2வது மனைவி: 3வது திருமணம் செய்ய நினைத்ததால் வெறிச்செயல்!

இந்த சீக்ரெட்டை எனது அலுவலகத்தில் பணியாற்றும் எனது காதலிக்கும் தெரிவித்தேன். இதன் பிறகு சிறிது காலம் கழித்து எனக்கும் அவளுக்கும் பிரேக் அப் ஆனது. அவளை பிரியக்கூடாது என முயற்சித்தேன் இறுதியில் சுமூகமாகவே இருந்தது எங்கள் பிரிவு.

2 நாட்கள் கழித்து எனக்கு மனிதவள மேம்பாட்டு பிரிவில் இருந்து அழைப்பு வந்தது. என் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்க இருப்பதாக சொல்லப்பட்டது. முந்தைய நாட்கள் நான் செய்த செயல்களின் ஸ்கிரீன் ஷாட்கள் எனக்கு காட்டப்பட்டன. அதில் மீம்கள், ட்ரேடிங், நியூஸ் படிப்பது, யூடியூப் போன்றவற்றின் பயன்பாடு மற்றும் உண்மையில் நான் எத்தனை மணி நேரம் வேலை பார்த்திருக்கிறேன், எவ்வளவு மணி நேரம் வீணடித்திருக்கிறேன் என்பதையெல்லாம் காட்டினார்கள்.

Also Read:  கொரோனா பயங்கரம்: நோய்த்தொற்று அச்சத்தால் 5 வயது மகளை குத்திக் கொலை செய்த தாய்!

நான் புகைப்பிடிக்க வெளியே சென்றிருந்த போது என்னுடைய ஸ்கிரீனை ஸ்கைப் வழியாக எனது முன்னாள் காதலி ஷேர் செய்து, அவற்றையெல்லாம் எனது HR-க்கு ரிப்போர்ட் செய்திருக்க வேண்டும். எனது வீர தீர சாகசங்களையெல்லாம் எனது முன்னாள் காதலிக்கு தெரியப்படுத்தியிருக்க கூடாது என்பதை உணர்ந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிட்டத்தட்ட எனது வேலை பறிபோகும் சூழல் தான் இருந்தது, இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை!” இவ்வாறு அந்த நபர் தன்னுடைய அனுபவங்களை Reddit பக்கத்தில் கொட்டித்தீர்த்திருக்கிறார்.

அந்த நபரின் அனுபவங்களை படித்த பலரும் அவருக்கு அட்வைஸ் செய்து ஆறுதல் தந்து வருகின்றனர். சிறிய தவறும் பெரிய கப்பலையே மூழ்க்கடித்துவிடும் என்பதற்கு இதுவே சான்று என்று ஒருவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: